தொலைக்காட்சி!!

Tuesday, March 28, 2017

27 மாணவிகள் 9A, 28 மாணவிகள் 8A : கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய மாணவிகள் வரலாற்றுச்சாதனை

நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது.
இது குறித்து சைவ மங்கையர் வித்தியாலயத்தின் அதிபர் சாந்தினி வேலுப்பிள்ளை லங்காசிறிக்கு கருத்து தெரிவிக்கையில்,
எமது பாடசாலை மாணவிகள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். இதில் சித்தியடைந்த மாணவிகளுக்கு தமது பாராட்டுக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
இந்த மாணவிகள் சித்தியடைவதற்கு பல வழிகளிலும் உதவிய ஆசிரியர்களுக்கு நன்றிகளையும் அதிபர் தெரிவித்தார்.
கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தில் 27 மாணவிகள் 9A சித்தியும், 28 மாணவிகள் 8A, 18 மாணவிகள் 7A, 7 மாணவிகள் 6A, 10 மாணவிகள் 5A சித்தியும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/education/01/140755?ref=lankasri-home-dekstop

No comments:

Post a Comment