Tuesday, February 7, 2017

ஜெ.வின் சமாதியில் கதறி அழுது உன்மையை போட்டு உடைத்த ஒபிஎஸ்: சசிகலா நிலை என்ன?

முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பு 45 நிமிடங்களுக்கு மேலாக ஆழ்ந்த மௌனத்தில் அமர்ந்துள்ளார். இதற்கான காரணம் தெரியவில்லை. அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பின்பு, செய்தியாளர்களை சந்தித்த இவர், தன்னை சிலர் பதவி விலக கூறி மிரட்டியதாகவும், இதனால் தான் எனது பதவியை இழக்க நேர்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெயலலிதா அம்மா அவர்கள் மருத்துவமனையில் இருந்த பொழுது, அங்கு நடந்தவை குறித்து இதுவரை யாருக்கும் தெரியாத சில உண்மைகளை தெரிவிக்க போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறியதாவது, அதிமுக பொதுச் செயலாளராக அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதணன் அவர்கள் தான் இருக்க வேண்டும், எனவே அவரை பொறுப்பேற்றுக் கொள்ள சொல்லுங்கள் என்று ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த பொழுது என்னிடம் கூறினார். ஆனால், கட்சியின் மூத்தநிர்வாகிகள் சேர்ந்து ஆலோசித்து சசிகலாவை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு என்னை முதலமைச்சராக பதவி ஏற்குமாறு வலியுறுத்திய போது நான் மறுத்தேன்.கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வரக்கூடாது என வலியுறுத்தியதால் ஏற்றுக்கொண்டேன்.
மனசாட்சி இடம் தராததால் தான் இங்கு வந்துள்ளேன், இதனுடன் அதிமுக தொண்டர்களுக்கு சில உண்மைகளையும் தெரிவிக்க வந்துள்ளேன்.
ஜெயலலிதாவின் நிலையை கண்டு மருத்துவமனையில் அழுது புலம்பினேன்.
வர்தா புயலில் நான் தீவிரமாக வேலை செய்தது சசிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இதனால், முதல்வராக என்னையை அமரவைத்து கொண்டு அவமானப்படுத்தினார்கள்.
நானும், பொது வாழ்விற்கு வந்துவிட்டால் அவமானங்களையும், இகழ்ச்சியையும் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்று அமைதியாகத்தான் இருந்தேன். சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பற்றி எனக்கு தகவல் கொடுக்காமல் கூட்டம் முடிந்த பின், என்னை அழைத்தார்கள்.
அப்போது, முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு கட்டாயப்படுத்தினார்கள். இதனால் தான் நான் பதவியை ராஜினாமா செய்யும் நிலை நேர்ந்தது.
ஆனால், மறைந்த அம்மாவின் ஆன்மா தான் என்னை நடந்த உண்மைகளை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த சொல்லி தூண்டியது. தற்போது, மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் வாங்குவேன் என பகிரங்கமாக தெரிவிர்த்துள்ளார் முதல்வர் பன்னீர்செல்வம்.
- See more at: http://www.manithan.com/news/20170207124886?ref=builderslide#sthash.5pwj7un8.dpuf

No comments:

Post a Comment