தொலைக்காட்சி!!

Friday, February 24, 2017

இலங்கையின் மானத்தை விற்பனை செய்யும் முன்னாள் இராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரிய!


பிரேசிலின் இலங்கை தூதுவராக கடமையாற்றும் முன்னாள் இராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரிய, அந்த நாட்டில் இலங்கையின் நன்மதிப்பை நாசமாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஆங்கில இணையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஜெகத் ஜெயசூரிய, பிரேசில் அரசாங்கத்தின் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கைகொள்ளாமல், தூரப்பயணம் ஒன்றை மேற்கொண்டபோது கொள்ளையர்களின் பிடிக்குள் சிக்கி தங்கம் உட்பட்ட அனைத்து உடமைகளையும் இழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அந்த நாட்டின் பத்திரிகைகளில் பிரசுரமான நிலையில் அது இலங்கையின் நன்மதிப்புக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இணையம் குறிப்பிட்டுள்ளது.
ஜெயசூரிய பிரேசிலின் தலைநகரில் இருந்து 1200 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள ராஜதந்திரிகள் விமானத்தில் மாத்திரமே செல்லும் இடம் ஒன்றுக்கு சாதாரண கெரவன் வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி இலங்கையில் இருந்து அவரின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டுள்ள இரண்டு மெய்பாதுகாவலர்களுடன் சென்றுள்ளார். (இந்த மெய்பாதுகாவலர்கள் இருவருக்கும் இலங்கை ரூபாவிலேயே சம்பளம் வழங்கப்படுகிறது)
பயணத்தின்போது ஜெயசூரிய நிறைபோதையிலேயே சென்றுள்ளார்.
இதன்போது ஓரிடத்தில் கொள்ளையர்கள் ஜெயசூரிய பயணித்த வாகனத்தை மறித்து கொள்ளைக்கு தயாராகிய போது அவரின் பாதுகாவலர்கள் இருவரும் தப்பியோடி விட்டனர். இதன்போது அவர்கள் ஒலிம்பிக் சாதனையை முறியடிப்பது போல ஓடிமறைந்தனர்.
இதனையடுத்து கொள்ளையர்கள் தனித்துப்போன ஜெகத் ஜெயசூரியவின் உடமைகள் அனைத்தையும் கொள்ளையிட்டு சென்றுவிட்டனர். செல்லும் போது அவர்கள் ஜெயசூரிய பயணித்த வேனிலேயே தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தநிலையில் அவரை கொள்ளையர்கள் கொலை செய்யாமல் சென்றது பெரும் பாக்கியம் என்றே கருதப்பட வேண்டும் என்று ஆங்கில இணையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து வேறு இடத்துக்கு வந்த ஜெயசூரிய அங்கிருந்து இலங்கை தூதரகத்துக்கு தொடர்புக்கொண்டு தலைநகருக்கு வந்துசேர்ந்தார்.
இந்த செய்தியை வெளியிட்டுள்ள ஆங்கில இணையம், ஜெயசூரிய அணிந்துள்ள ஒரு காற்சட்டையை சுட்டிக்காட்டி அது பெண்கள் அணியும் காற்சட்டை என்றுக்கூறியுள்ளது. அத்துடன் அவர் இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி என்பதையும் அந்த இணையம் நினைவுப்படுத்திய சம்பவம் மீண்டும் இணையத்தில் கலக்கத் தொடங்கியுள்ளது…..
- See more at: http://www.asrilanka.com/2017/02/24/40860#sthash.yCcNG5yz.dpuf

No comments:

Post a Comment