தொலைக்காட்சி!!

Wednesday, February 22, 2017

தமிழகத்தின் அடுத்த முதல்வர் தமிழச்சியா? இவர் இந்தியாவைச் சேர்ந்தவரே... அதிர்ச்சி தகவல்!


சுவாதி கொலை வழக்கில் முத்துக்குமார் என்பவரை முன்னிறுத்தி பரபரப்பை கிளப்பியுள்ள ‘பிரான்ஸ்’ தமிழச்சி இதற்கு முன்னர் எழுத்தாளர் சாருநிவேதிதாவின் ஆபாச வக்கிர முகத்தையும் அம்பலப்படுத்தியவர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை முன்கூட்டியே சொன்னவரும் இவர்தான்.. ஊடகங்கள் நுழையாத இடங்களில் கூட இவர் நுழைகின்றார் என்பதே உண்மை…
சின்னம்மா கைதுச்செய்யப்படுவார் என முன்கூட்டியே கூறியவரும் இவர்தான்.. பன்னீர் செல்வம் பற்றியும் தனது உண்மை நிலையினை மக்களுக்கு வெளிப்படுத்தி வந்த இவர் தற்போது தற்போது எடப்பாடி பழனிச்சாமி பற்றி இவர் வெளியிட்ட கருத்துக்கள் இதோ..
தமிழகத்தின் அரசியலின் எதிர்கால நிலைமையினையும், இனி என்ன நடக்கப்போகின்றது என்பதனையும் முன்கூட்டிய கூறும் இவரை விட தமிழகத்திற்கு சிறந்த முதலமைச்சர் யாராக இருக்க முடியும் என தற்போது கேள்வி எழுந்துள்ளது.
யார் இந்த தமிழச்சி…
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தமிழச்சி என்ற பெண் முகநூலில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எழுதி வருகிறார். பெண்ணியம் தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், நாத்திகம் தொடர்பாக இவர் அதிகம் பதிவிட்டு வருகிறார். இவரது முகநூல் கணக்கை 7லட்சம் பேர் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
அவ்வப்போது தமிழகத்துக்கு வந்து செல்லும் தமிழச்சி பெரியார் இயக்கத்தினர் நடத்திவரும் நிகழ்வுகளில் பங்கேற்பது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கோவையில் இவ்வாறு நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழச்சி பங்கேற்றுள்ளார்.
பாண்டிச்சேரி தமிழச்சியின் பூர்விகம் என்றும், அவரது இயற்பெயர் உமா என்றும் தெரியவந்துள்ளது. மதம் மாறிய பின்னர் யுமா காத்தரின் என்றும் பெயர் மாற்றிக் கொண்டுள்ளார். இவரது கணவர் பெயர் சிவா என்றும் இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை சேர்ந்த பிரபல தமிழ் எழுத்தாளருடன் இவர் வாழ்ந்து வந்துள்ளார். தற்போது பிரான்சில் தனியே வசித்துவரும் தமிழச்சி, கலைப்பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தமிழச்சி என்ற பெயரிலும், தமிழச்சி வாசகர் வட்டம் என்றபெயரிலும் இரண்டு முகநூல் கணக்குகளை இவருக்கு உள்ளது.
தமிழக போலீசாரின் கைது நடவடிக்கை தொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள யுமா காத்தரின், இதனை மேலும் உண்மைகளை சொல்வதற்கான வாய்ப்பாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திற்கு நீங்கள் வந்தால் தமிழகத்தின் அடுத்த முதல்வருக்கான முழுமை தகுதி உங்களிடமே இருப்பதாக சில அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழச்சி பிரியர்கள் அதிகரித்து வருகின்றார்கள்..ரஜினி விஜயை நம்பி ஏமாந்த தமிழகத்தின் தலைவிதியை மாற்றும் பெண் சக்தியாக தமிழச்சி பார்க்கப்படும் நிலை விரைவில் வரப்போகின்றதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆகவே தமிழகத்தின் தலைவிதியை மாற்றும் அடுத்த முதல்வர் தமிழச்சியா???
- See more at: http://www.manithan.com/news/20170221125217#sthash.BJaYXQqv.dpuf

No comments:

Post a Comment