தொலைக்காட்சி!!

Thursday, January 19, 2017

உலகின் பாதி மக்களை விட எட்டு பேரிடம் அதிக செல்வம்


உலக மக்கள் தொகையில் பாதி அளவானோரிடம் இருப்பதை விடவும் வெறும் எட்டுப் பேரிடம் அதிக செல்வம் இருப்பதாக தொண்டு நிறுவனமான ஒக்ஸ்பாம் குறிப்பிட்டுள்ளது. இந்த அளவான ஏற்றத்தாழ்வு எமது சமூகத்தை பிளவுபடுத்தும் அச்சுறுத்தல் கொண்டது என்று அது எச்சரித்துள்ளது.

ஆறு அமெரிக்க வர்த்தகர்கள், ஒரு ஸ்பெயின் செல்வந்தர் மற்றும் மெக்சியோ வர்த்தகர் ஒருவரிடம் இருக்கும் செல்வம் உலகில் ஏழ்மையில் இருக்கும் 3.6 பில்லியன் மக்களின் செல்வத்திற்கு நிகராக உள்ளது.

போபசின் உலக செல்வந்தர்கள் பட்டியலின்படி மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் சுகர்பேக் மற்றும் அமசோன் நிறுவனர் ஜெப் பேசொஸ் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

ஏழை மற்றும் செல்வந்தர்களுக்கு இடையிலான இந்த பாரிய இடைவெளி உலகெங்கும் பிரதான அரசியல் நீரோட்டத்தில் அதிருப்தியை வளர்க்கும் என்று ஒக்ஸ்பாம் சுட்டிக்காட்டியுள்ளது.

பெருபாலான ஊழியர்களின் வருமானம் மந்தமடைந்து வரும் நிலையில் 2009 தொடக்கம் பெரும் பணக்காரர்களின் செல்வம் சராசரியாக 11 வீதத்தால் உயர்ந்து வருவதாக ஒக்ஸ்பாம் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

உலகின் பெரும் செல்வந்தரான பில் கேட்ஸ் 2006 ஆம் ஆண்டு மைரோசொப்டில் இருந்து வெளியேறும் அறிவிப்பை வெளியிட்டு, அதிகமான சொத்துகளை செலவிட்டபோதும் அன்று தொடக்கம் அவரது சொத்து மதிப்பு 50 வீதத்தால் அல்லது 25 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வரி ஏய்ப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் பணக்காரர்களுக்கு அதிக விகிதத்தில் செலுத்தும் பங்குதரார் முதலாளித்துவ முறையை மாற்றும்படியும் ஒக்ஸ்பாம் அழைப்பு விடுத்துள்ளது.

ஒக்ஸ்பாம் கடந்த நான்கு ஆண்டுகளாக இவ்வாறான அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த ஆண்டு அது வெளியிட்ட அறிக்கையில், உலகின் ஒரு வீத செல்வந்தர்களிடம் எஞ்சியோரை விடவும் அதிக செல்வம் இருப்பதாக கூறப்பட்டது தற்போதும் பெருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போபஸ் மற்றும் உலக செல்வநிலை பற்றிய கிரெடிட் சுசேவின் ஆண்டு அறிக்கை அடிப்படையிலேயே ஒக்ஸ்பாம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
17 Jan 2017
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1484663698&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment