Friday, December 30, 2016

முட்டாள்கள் நிறைந்த கட்சி அ.தி.மு.க..! காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கலக்கல் அறிக்கை..!


அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தனது சமூக வலைதளத்தில் எதிர்மறையாக விமர்சித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ஸ்டேடஸில். முட்டாள்கள் நிறைந்த கட்சி அதிமுக, என்று ஒரு போடு போட்டார்.
ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் கொடுக்கனும், ஜெயா மறைந்த நாளை விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டும், பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என சசிகலா தலைமையிலான அதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.
இதில் உண்மையென்னவெனில், மறைந்த ஒருவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட மாட்டாது. அதற்கான விதி நோபல் பரிசு கமிட்டியின் விதியில் தெளிவாக உள்ளது.
விவாசயிகள் தினம் ஏற்கனவே டிசம்பர் 23 அன்று மறைந்த பிரதமர் சரண்சிங் அவர்களின் நினைவாக ஏற்கனவே கொண்டாப்பட்டு வருகிறது.
பாரதரத்னா விருது ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சிறைவாசம் அடைந்தவர்களுக்கு கொடுப்பது மரபு அல்ல.
அதுவும் மறைந்த முதல்வர் மேல் 15 க்கு மேற்பட்ட ஊழல் வழக்குகள் போடப்பட்டு இருந்தது என்பது அனைவரும் அறிந்த தகவல்.
இதிலிருந்து நாம் அறிய வேண்டியது, இதுப்போன்ற அடிப்படை தகவல் கூட தெரியாமல் தான் முதலைமைச்சர், 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் , 133 எம்.எல்.ஏ க்கள் , 54 எம்பிக்கள், சபாநாயகர் என வரிசைக்கட்டி நிற்ப்பது கேலிகூத்தானது.
பல தமிழ்சங்கங்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடத்தியவன், குடவோலை முறையை உலகுக்கே அறிமுகப்படுத்தியவன். திருக்குறள், தொல்காப்பியம் போன்ற பல ஆயிரக்கணக்கான காப்பியங்களை உலகுக்கே ஈன்றவன்தான்.
இத்தனை முட்டாள்களை தேர்ந்தெடுத்தவன் தமிழன்!” என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது “நான் இதை பதிவிடவில்லை, எனக்கு அரசியல் ஈடுபாடு அறவே கிடையாது, மேலும் எனக்கு மிகவும் நெருங்கிய சிங்கமுத்து அவர்கள் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் ‘அதிமுக’வை சேர்ந்தவர்கள் தான்.
நான் நடிப்பதில் மற்றும் தான் கவனம் செலுத்துகிறேன், எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. மற்ற செய்திகளை வாட்ஸாப்பில் பகிரும் போது தவறுதலாக இந்தச் செய்தி பதிவாகி இருக்கலாம், மற்றபடி எனக்கு யாரிடமும் எந்த எதிர்ப்புகளும் கிடையாது” என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment