Wednesday, December 28, 2016

திரு பாலசுப்பிரமணியம் அதீஸ் அகாலமரண அறிவித்தல்!

மண்ணில் : 11 சனவரி 1995 — விண்ணில் : 26 டிசெம்பர் 2016

கனடாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் அதீஸ் அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், யாழ்.வடமராட்சி புலோலி மேற்கு வாணர்குடியிருப்பைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் நாகராணி தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வரும்,
பிரதாத்(தினேஷ்), நிரோஜன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கஜானி அவர்களின் அன்பு மைத்துனரும்,
Aizen அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
பாலேஸ்வரன்(பாலேஸ்), விஜயகுமார், ரட்ணகோபால், இன்பவதி, சிவமலர், ஜெயமலர் ஆகியோரின் பெறாமகனும்,
நவரட்ணம், இரவீந்திரன், விஸ்திரன்(பிரான்ஸ்), பாலேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற மகாலிங்கம்(ஆசிரியர் - மல்லாவி), குகப்பிரியை, கலாவதி(கனடா), கலாவதனி(லண்டன்), பாமினி(பிரான்ஸ்), வாசுகி(இலங்கை) இராசராணி(ஆசிரியர்- மல்லாவி) ஆகியோரின் மருமகனும்,
அபிராமி, கோகுலன், அர்ச்சனா, சுஜன், சஜீவன், சயந்தன், செந்தூரன், அஸ்வின், அருண் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ரூபன்(லண்டன்), கஜிதரன், விபிஷா(லண்டன்), தேனுஷா, வைஸ்ணவி, விதுஷா, விதுரன், விபிஷன், விஷானி, சிந்துஜா, கயல்விழி, ஐங்கரன், அகத்தியா, சுமித்தா, தரணியா, கெளதமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பாலேஸ்(சித்தப்பா)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 30/12/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 31/12/2016, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:சனிக்கிழமை 31/12/2016, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 31/12/2016, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி:highland hills crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பாலா — கனடா
செல்லிடப்பேசி:+16475046793
தினேஸ் — கனடா
செல்லிடப்பேசி:+16479553337
நிரோஜன் — கனடா
செல்லிடப்பேசி:+14162711800
நவம் — கனடா
செல்லிடப்பேசி:+14164123510
இரவீந்திரன் — கனடா
செல்லிடப்பேசி:+14164023699
பாலேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94768951144
விஸ்திரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652355866
இராசராணி(மல்லாவி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778176380
பாலேஸ் — கனடா
செல்லிடப்பேசி:+14163586853
http://www.kallarai.com/ta/obituary-20161228214575.html

கனடாவில் கோர விபத்தில் பலியான இரு ஈழத் தமிழர்கள் - பொலிஸார் சந்தேகம்?


கனடாவில் பிக்கறிங்கில் Taunton வீதி மற்றும் Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஈழத் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்ட நிலையில் குறித்த இளைஞர்கள் பயணித்த Honda மற்றும் Toyota ஆகிய வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நேருக்கு நேர் மோதுண்ட வாகனத்தில் இருந்த இரண்டு ஈழத் தமழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்றும், குறித்த விபத்தில் சதீஸ் லோகநாதன் என்ற 35 வயதுடைய நபர் மற்றும் அதீஷ் பாலசுப்பிரமணியம் என்ற 21 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இருவரும் இலங்கை சந்தத்தியை சேர்ந்தவர்கள் என அவர்களின் நண்பர்கள் கூறியுள்ளனர்.
சதீஸ் லோகநாதன்..
லோகநாதன், நல்ல வாழ்க்கை ஒன்று வாழ வேண்டும் என்ற நோக்கில் ஆறு வருடங்களுக்கு முன்னர் கனடா சென்றுள்ளார், அவர் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வேலைகளை செய்துள்ளார்.
அவரது மனைவியையும் கனடாவிற்கு அழைத்து வந்து இருவருமாக பண சேமிப்பில் ஈடுப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சதீஸ் லோகநாதன், Whitbyயில் உள்ள Charley Ronick’s pub இல் கடமை முகாமையாளராக கடமை புரிகின்றார்.
அவரது திடீர் மரணம் தொடர்பில் உலக செய்திகளில் ஒளிபரப்பப்பட்ட நேரத்தில் அவருடன் பணியாற்றிய சக தொழிலாளர்கள் கலங்கிப் போயுள்ளனர்.
அதீஷ் பாலசுப்பிரமணியம்..
இதேவேளை, அதீஷ், ஒன்ராறியோ நிறுவனம் பல்கலைக்கழகத்தில் வணிக பட்டம் முடித்துள்ளார் என்றும் அவர் கருணை உள்ளம் கொண்டவராவார்.
இவர் நன்றாக பணிபுரிபவர் என்று அதீஷ் பாலசுப்ரமணியத்தின் சகோதரர் நிரோஜன் கூறியுள்ளார்.
விபத்து..
லோகநாதன் தனது காரின் கட்டுப்பாட்டை இழக்க காரணம் என்ன என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மது பாவனையோ, காலநிலையோ இந்த பாரிய விபத்துக்கு காரணமாக இருக்க இயலாது என "டர்ஹாம்” பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த இருவரின் கார்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கோர விபத்து தொடர்பில் தகவல் தெரிந்தால் 1-888-579-1520 மற்றும் 1-800-222-8477 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த தகவலை கனடாவின் பிரதான செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment