தொலைக்காட்சி!!

Friday, December 23, 2016

விஜய் சூப்பர் சிங்கர்க்கு பிரித்தானியா ஈழத்து சிறுமி மாதுலானி பார்னாண்டோ தகுதி!

விஜய் தொலைக்கட்சி நடாத்தும் சூப்பர் சிங்கர் பாட்டுப்போட்டிக்கு பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் ஈழத்து சிறுமி மாதுலானி பார்னாண்டோ தகுதி பெற்றுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்றுவரும் தெரிவுப்போட்டிகளில் 70 போட்டியாளர்கள் கலந்துகொண்ட போதும் 30 பேர் கொண்ட குழுவில் இவர் தகுதி பெற்றுள்ளார்.
ஈழத்தில் திருகோணமலை கீறின் றோட் பகுதியைச் சேர்ந்த திரு.திருமதி பலனி பார்னாண்டோ தம்பதிகள் புலம்பெயர்ந்து பிரிந்தானியாவில் வாழ்ந்து வருகின்றனார்.
அவர்களின் புதல்வி மாதுலானி சிறு வயது முதல் பல்துறைகளிலும் திறமையானவர், கல்வி விளையாட்டுக் கலை போன்ற துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி பல விருதுகளை பெற்றுள்ளார்.
கடந்த மூன்று வருடங்களாக சிறந்த பாடகியாக வலம்வரும் மாதுலானி பிரித்தானியாவில் நடைபெற்ற இசைநிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறந்த பாடகியாக தெரிவாகியுள்ளார். அந்த வகையில் “ஜி.ரீ.வி இசைக்குயில் லண்டன்”, “சூப்பர் சிங்”, “அவர்ந்தனா”, “பிரிய ரகங்கள்”, “கானக்குயில்” போன்ற விருதுகளை வென்று சிறந்த பாடகியாக வலம்வருகின்றார்.
தமிழ்நாட்டில் எதிர்வரும் தை மாதம் நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிவரை முன்னேறி ஈழத்தமிழ்மக்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.

No comments:

Post a Comment