தொலைக்காட்சி!!

Wednesday, December 14, 2016

திருமதி சரஸ்வதி ஆறுமுகம் (இளைப்பாறிய உப அதிபர், யாழ்/ இந்து ஆரம்பப் பாடசாலை) மரண அறிவித்தல்!


எமது சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களின் அன்புத்தாயார் திருமதி ஆறுமுகம் சரஸ்வதி அம்மையார் (இளைப்பாறிய ஆசிரியை-யாழ் இந்து ஆரம்ப பாடசாலை)இன்று காலமாகியுள்ளார்.

அன்னாரின் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்துக்கு எனதும் நான் சார்ந்த அமைப்புகளினதும் ஆழ்ந்த துயரைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

இறுதிக் கிரியைகள் நாளை வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு நல்லூரிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று இணுவில் பூவோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.


 

 ஸ்கந்தவரோதயா கல்லூரியின் முன்னாள் புகழ்பூத்த அதிபரும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும் தெல்லிப்பழை துர்க்கா தேவஸ்தான தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகனை இந்த மண்ணிற்கு ஈந்த ஆறுமுகம் சரஸ்வதி அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஸ்கந்தப்பெருமானை வேண்டுகின்றோம்

உதிர்வு : 14 டிசெம்பர் 2016

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி ஆறுமுகம் அவர்கள் 14-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லமுத்து தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம்(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை) அவர்களின் மனைவியும்,
ஸ்ரீஸ்கந்தமூர்த்தி, குகமூர்த்தி, குககுமாரி, கோணேஸ்வரி, ஆறுதிருமுருகன், விக்னேஸ்வரி, கேதீஸ்வரி ஆகியோரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் இணுவில் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ஆறுதிருமுருகன்(மகன்)
தொடர்புகளுக்கு
ஆறுதிருமுருகன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776258511
http://www.kallarai.com/ta/obituary-20161214214460.html

No comments:

Post a Comment