தொலைக்காட்சி!!

Tuesday, November 15, 2016

குடி, போதை ஊசி, பெண்கள்…! வீழ்ந்த அபார நடிகர்..! இறந்த இரவு அந்த காட்சி…!! இறைவா…?!

சிகப்பானவர்கள் தான் சினிமாவில் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதை உடைத்து கருப்பு நடிகர்களும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவரைத் தொடர்ந்து பூ விலங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் முரளி..!
தனது ஆழமான நடிப்பால் தமிழ் திரையைக் கட்டிபோட்டவர்..! ஆனால் இவருக்கு குடிப்பழக்கம் ஆரம்பித்தது.
இதனால் நல்ல படங்கள் இவர் கை விட்டுப் போக படங்கள் இல்லாமல் வீட்டில் அடைந்தார்..! மீண்டும் புது வசந்தம் படத்தின் மூலம் மறு பிறவி எடுத்தார்.
தொடர்ந்து அற்புதமான கதைகள் தேடி வர மீண்டும் பிசி ஆனார். தொடர்ந்து வெற்றிப் படங்கள்..! மீண்டும் ஜால்ராக்கள் இவரை திசை மாற்றி குடி, பெண்களை பழக்கப் படுத்தினார்கள்..!!
முடிந்தது கதை. மீண்டும் சூட்டிங் சரியாகச் செல்லாமல் பெயரைக் கெடுத்துக் கொண்டார். இவருக்கு இதே வேலையாகப் போய் விட்டது என்று வெறுத்துப் போன இயக்குனர்கள் இவரை ஒதுக்கினர்.
படங்கள் இல்லாமல் வீட்டில் முடங்கினார். இவரின் உடல் நிலையை குடும்பத்தினர் சரி செய்தனர். பி ஆர் ஓ மூலம் மீண்டும் வாய்ப்புத் தேட.. காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் மூன்றாவது முறையாக மறு பிறவி எடுத்தார்.
படம் வெள்ளிவிழா கண்டது. தினந்தோறும் என்கிற படமும் பெரிய வெற்றி பெற தனது பழக்கங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு நல்ல பிள்ளையாய் ஒரு ரவுண்டு வந்தார்..!
சமுத்திரம், ஆனந்தம் போன்ற படங்கள் பட்டையைக் கிளப்பின. அன்பான மனைவி இவரை நல்வழிப் படுத்தினார். கூடவே சென்றார்.
இயக்குனர்களுக்கும் புது முரளியைக் கண்ட மகிழ்ச்சியில் நிறைய வாய்ப்புகளை கொடுத்தனர்.
இப்போது தான் கேடு கேட்ட நண்பர்கள் மூலம் போதை ஊசிப் பழக்கம் வந்தது என்கிறார்கள். இது அவரது குடும்பத்திற்கே கொஞ்ச நாள் தெரியாதாம்.
அப்படி தெரிந்த போது அதிர்ந்து போனார்கள். ஆனால் நிலைமை கைமீறிப் போய் விட்டதாக கூறுகிறார்கள்.
திரும்பவும் பெயர் கெட்டது.. பல படங்கள் பாதி சூட்டிங்கில் நின்றது. தயாரிப்பாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
நல்ல படங்கள் எல்லாம் பாதியில் நிற்க இயக்குனர்கள் கண்ணீர் சிந்தினர். வாழ்க்கையை இழந்து தவித்தனர். ஆனால் இது பற்றி எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் நடிகர் இல்லை.
வீட்டோடு முடங்கிக் கிடந்தார். கோபுரக் கலசம் விஷயத்திலும் இவர் பெயர் அடிபட்டது. அதில் ஒரு பெரிய கர்நாடக அரசியல் வாதி முரளியை மிரட்டி அச்சுறுத்தியாக அப்போது தகவல் வெளியாகி பெரும் பரபரப்பானது…!
அதில் மிகுந்த மன நெருக்கடிக்கு ஆளானாராம் முரளி. எப்படி மீள்வது என்று தெரியாமல் படுத்த படுக்கையில் வீழ்ந்தார்.
ஆனாலும் அந்த ஊசி விஷயம் மட்டும் தொடர்ந்தது என்கிறார்கள். அவர் இறந்த அன்று இரவு மீண்டும் ஒரு கொலை மிரட்டல்வந்ததாம்..
கடும் அதிர்ச்சிக்கு ஆளான நடிகர் அதிக அளவில் மருந்து எடுத்துக் கொண்ட தாகவும் அதனால் அது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என்று இப்போது பேசுகிறது கோடம்பாக்கம்.
எது உண்மை என்பது மறைந்த அந்த அபார நடிகருக்கு மட்டுமே தெரியும்..!!! கொடுமை.
http://hi2cinema.com/celebs/06/132727?ref=right_featured

No comments:

Post a Comment