தொலைக்காட்சி!!

Saturday, November 5, 2016

அச்சமற்ற காதல் கதை! சபாநாயகரின் மகளின் மரணம் குறித்து பிரித்தானிய ஊடகங்களின் பார்வை

சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளான சன்ஜீவனி இந்திரா ஜயசூரியவின் மரண சடங்குகள் இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கடைசி விருப்பத்திற்கமைய அனைத்து நடவடிக்கைகளும் பிரித்தானியாவில் நடைபெறுகின்றன.
புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சஞ்ஜீவனி கடந்த இரண்டாம் திகதி லண்டன் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
சஞ்ஜீவனி உயிரிழப்பதற்கு முன்னர் புற்றுநோயில் பாதிக்கப்பட்டிருந்த போது இரண்டு பிள்ளைகளுக்கு தாயானமை, ஒரு குழந்தைக்காக தான் வாழ்வதற்காக இறுதி சந்தர்ப்பத்தை அர்ப்பணித்தமை மற்றும் வாழ்ந்த இறுதி காலங்களில் குடும்பத்தினருக்காக செலவிட்டமை தொடர்பில் பிரித்தானிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
“அச்சமற்ற காதல் கதை” என்ற தலைப்பில் பிரித்தானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் தனது மார்பக புற்றுநோய் தொடர்பில் 2008ஆம் ஆண்டு அறிந்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையால் மார்பக புற்றுநோயை முழுமையாக குணப்படுத்திக் கொண்டவர். IVF சிகிச்சை முறையில் அவர் முதலாவது குழந்தையை பெற்றுள்ளார்.
அதற்கமைய அவரது முதலாவது குழந்தையாக திலினி அந்த குடும்பத்தில் 2012ஆம் ஆண்டு இணைந்துக் கொண்டுள்ளார். அத்துடன் இடை நிறுத்தாமல் மீண்டும் IVF சிகிச்சையில் தனது இரண்டாவது மகனை 2015ஆம் ஆண்டு பெற்று திலின் என அவருக்கு பெயர் வைத்தார்.
தனது இரண்டாவது குழந்தை பெற்றெடுக்க எதிர்பார்ப்புடன் இருந்த சந்தர்ப்பத்தில் அவர் மீண்டும் மார்பு புற்று நோயில் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்துக் கொண்டுள்ள போதிலும், பிறக்கவிருந்த குழந்தையின் உயிரை பாதுகாப்பதற்காக தனது சிகிச்சையை தாமதிப்பதற்கு இந்திரா தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை பிறப்பதற்கான காலத்திற்கு முன்னர் சிகிச்சை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அவருக்கு காணப்பட்ட போதிலும், தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் உயிரை தீர்மானிக்கும் காலப்பகுதி என்பதனால் அவர் தனது சிகிச்சையை தாமதிக்க மேற்கொண்ட தீர்மானத்தால் குழந்தை காப்பாற்றப்பட்ட போதும், அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
அவரது இறுதி சடங்கில் பங்குப்பற்றுவதற்காக சபாநாயகர் கருஜயசூரிய உட்பட அவரது குடும்பத்தினர் பிரித்தானிய சென்றுள்ளனர். அவரது விருப்பத்திற்கமைய இறுதி சடங்குகள் லண்டனிலுள்ள அவரது வீட்டில் நடைபெறவுள்ளது.
“நான் சென்றதன் பின்னர் மீண்டும் ஒரு காதலை தேடுங்கள், எனினும் அவரும் குழந்தைகளை இதே போன்று நேசிக்கும் ஒருவராக இருக்க வேண்டும்.......”
என இந்திரா இறுதியாக தனது கணவரிடம் கூறியுள்ளமையின் ஊடாக அவர் தனது குடும்பத்தையும் கணவரையும் எந்த அளவிற்கு நேசிக்கின்றார் என்பதனை காணமுடிகின்றதென பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment