தொலைக்காட்சி!!

Sunday, October 16, 2016

திருமதி இரத்தினசபாபதி கனகம்மா மரண அறிவித்தல்!

தோற்றம்:17.03.1932. மறைவு:14.10.2016

இரத்தினசபாபதி கனகம்மா 14.10.16 வெள்ளிக்கிழமை அன்று நீர்கொழும்பில் காலமானார்.அன்னார் காலம் சென்ற இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற கதிரித்தம்பி, ஜோகம்மா ஆகியோரின்அருமை மகளும் காலம் சென்ற தம்பையா,இராமாசிப்பிள்ளை அவர்களின் மருமகளும்,கருணாநிதி, கமலபூசணி,கமலவேணி,கமலவதனி,சத்தியவாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்.
மஞ்சுளதேவி,சதானந்தன்,உதயசூரியன்,சுந்தர்ராஜ், ஏகாம்பரம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும். சரஸ்வதி,சௌந்தரம், பெரியநாயகி, ஆறுமுகம், குணபூசணி,கதிரேசப்பிள்ளை ஆகியோரின் ஆருயிர் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 17.10.2016 திங்கள்கிழமை பகல் 10 மணியளவில் நயினாதீவு இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நயினை சல்லிபரவை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
தகவல்: மக்கள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

No comments:

Post a Comment