Friday, October 28, 2016

தீபாவளி தமிழர்கள் பண்டிகையா? அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!


தீபாவளி என்றதுமே ஜொலிக்கும் புத்தாடைகள், பட்டாசுகள், தித்திக்கும் இனிப்புகள் தான் நமக்கு ஞாபகம் வரும்.
'தீபம்' என்றால் ஒளி, 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி என்கிறோம்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை விட தீபாவளியே வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.
நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்ததே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று கூறினாலும் இன்னும் பல காரணங்களும் சொல்லப்படுகிறது.
குறிப்பாக இது தமிழர்களுக்கான பண்டிகையே அல்ல என்றும் கூறப்படுகிறது.
'நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா' என்று பாரதிதாசன் சொன்னதை இங்கே நினைவுகூறலாம்.
பண்டைய காலத்தில் தமிழர்கள் தீபாவளி கொண்டாடியதற்காக எந்தவொரு வரலாறும் இல்லை, 63 நாயன்மார் காலத்திலும் 12 ஆழ்வார் காலத்திலும் கொண்டாடப் படாத தீபாவளி இன்று தமிழர்களால் கொண்டாடப்படுவது ஏன்?
இதுமட்டுமா ஏற்கனவே நாம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வரும் நிலையில் இந்த கொண்டாட்டங்களினால் மேலும் மாசுபடுத்தி வருகிறோம் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன?
ஒருநாள் கொண்டாட்டத்திற்காக பட்டாசு வெடி விபத்தில் எத்தனை உயிர்கள் பலியாகின்றன.
பட்டாசுகளை கொளுத்தும் முன் பச்சிளம் குழந்தைகள், நோயாளிகள், விலங்குகளை நினைத்து பாருங்கள்!!!

No comments:

Post a Comment