Friday, October 14, 2016

ஒரே நேரத்தில் 2 குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் படத்தை பதிவிட்ட பெண்ணின் பேஸ்புக் பக்கம் முடக்கம்!


ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவது போல் புகைப்படம் பதிவிட்ட பெண்ணின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் 2 குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் படத்தை பதிவிட்ட பெண்ணின் பேஸ்புக் பக்கம் முடக்கம்
வாஷிங்டன்:

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை சேர்ந்த ரெபேக்கா வானோசிக் என்ற பெண்மணி புகைப்படம் ஒன்றினை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த படத்தில் இரண்டு குழந்தைகளை கையில் ஏந்தியவாறு ரெபேக்கா தாய்ப்பால் ஊட்டுவது போல் இருந்தது.

இந்த படத்தை வெளியிட்டதற்காக ரெபேக்காவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. புகார்கள் வந்ததை தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரெபேக்கா கூறியதாவது:-

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை என்னுடைய நண்பர் ஒருவரிடம் இருந்து குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் அந்நியர் ஒருவரின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியுமா? என்று அதில் கேட்டிருந்தார்.

அந்த குழந்தையின் தாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தை புட்டி பாலையும் குடிக்க மறுக்கிறது என்று தெரிவித்து இருந்தார்.

அந்த குழந்தை மிகவும் பசியுடன் காணப்பட்டது. இத்தகைய நேரத்தில் என்னுடைய குழந்தைக்கு மற்றவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனை தான் நான் செய்தேன்.

இந்த புகைப்படத்திற்கு இரண்டு விதமாக கருத்துக்கள் வந்தது. பலர் அழகாக இருந்ததாக வரவேற்பு தெரிவித்தனர். சிலர் திரையிட வேண்டும் என்று கருத்து கூறினர்.

இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “தாய்ப்பால் ஊட்டும் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட அனுமதி உண்டு.

தாய்ப்பால் ஊட்டுவது இயற்கையானது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தாய்மார்கள் இந்த அனுபவத்தை மற்றவர்களுக்கு பகிர்வது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாங்கள் அறிவோம்.

அந்த பெண்ணின் பேஸ்புக் முடக்கப்பட்டது தவறுதலாக நடைபெற்றது. அதனை மீண்டும் சரிசெய்துவிட்டோம்.

பல லட்சம் புகார்கள் வருவதால் இது போன்ற தவறுதல்கள் நடைபெறுகின்றன. இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.

http://www.canadamirror.com/canada/71853.html

No comments:

Post a Comment