Sunday, September 25, 2016

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு நற்செய்தி!

இலங்கையில் காணி கொள்வனவில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு வரிவிலக்கு வழங்க சமகால அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாட்டவர்கள் அல்லது 50க்கும் அதிகமான வெளிநாட்டு பங்குகளை கொண்டுள்ள நிறுவனங்களுக்கு, விற்பனை மற்றும் குத்தகை அடிப்படையில் காணிகளை வழங்கும்போது இந்த சலுகை வழங்கப்படவுள்ளது.
காணி வரியை அகற்றுவதற்கு திருத்த வரைவு ஒன்று நிதி அமைச்சரின் உத்தரவிற்கமைய வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவித்தல் கடந்த இரண்டாம் திகதி வெளியான அரசாங்க வர்த்தமானியில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் காணி திருத்த சட்டமூலம் இலக்கம் 38 கீழ் புதிய நடைமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் திகதியில் இருந்து செயற்படுத்தப்படும் வரிக்கமைய வெளிநாட்டவர்களுக்கு அல்லது வெளிநாட்டவர்களுக்கு 50 வீதத்திற்கு அதிகமான பங்குகள் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு காணி விற்பனை செய்யும் போதும், காணிக்கான குத்தகை வரி வட்டிக்காக செலுத்த வேண்டிய தொகையில் 15 வீதம் காணி குத்தகை வரி ஒன்றை செலுத்த வேண்டும்.
இதற்கு மேலதிகமாக 10 வருடத்திற்கு அதிகமான காலப்பகுதி நாட்டினுள் செயற்படும் வெளிநாட்டவர்களுக்கு அல்லது 50 வீதத்திற்கும் அதிகமான வெளிநாட்டு பங்குகளை கொண்டுள்ள நிறுவனங்களுக்கும் 7.5 வீதம் என்ற வகையில் வரி அறவிடப்படும்.
அத்துடன் நிறுவன சட்டமூலத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டவர்களுக்கு பங்குகள் உள்ள நிறுவனங்களுக்கு தொகுப்புவீடுகள் சொத்தின் கீழ் உள்ள அடுக்கு மாடி வீடுகளுக்கு, முதலீட்டு பகுதிகள் உள்ள நிறுவனங்களுக்கு, சுற்றுலா பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு, தொழிற்சாலை பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு, வெளிநாட்டவர்களின் தொடர்பு காணப்பட்டால் அதன் வரி 7.5 வீதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment