Monday, August 8, 2016

நண்பர்கள் தினம்: அடிமைத்தமிழனின் அறிஞர்கள் சொல்லும் பொன்மொழிகள் தான் என்ன?

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் ஆகும். நட்பு என்பது முழுமையான மகிழ்ச்சி, விலை மதிப்பற்றது, ஈடு இணையில்லாதது, துன்பத்தை போக்கக்கூடியது, சுயநலமற்றது என நட்பு பற்றி விளக்கம் அளித்துக்கொண்டே போகலாம்.
நண்பர்களிடையே முறிவு என்பது வரக்கூடாது ஒன்று, அப்படி தவிர்க்க முடியாத காரணத்தினால் உங்கள் நண்பர்களை பிரிந்துவிட்டால், இந்த தினத்தை பயன்படுத்தி உங்கள் உறவை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.
நண்பர்களிடம் மன்னிப்பு கேட்பதால் எந்த இழிவும் இல்லை என்பதை உணருங்கள்.
நண்பர்கள் குறித்து சில பொன்மொழிகள்
"பனைமரம்" தானாக முளைத்து ,தனக்கு கிடைத்த நீரை குடித்து தன் உடம்பையும்,ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்குதருகிறது. நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்றநண்பன்.
"தென்னைமரம்" தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது. அதுபோல நிமிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.
"வாழைமரம்" தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும்.அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன்.
இந்த மூவரில் பனைமரம் போன்றவனை தேர்ந்தெடுக்க வேண்டும். -கவிஞர்.கண்ணதாசன்
  • ஒரு நண்பனை பெறுவதற்கு ஒரே வழி, நீயும் நல்ல நண்பனாக இருப்பது தான் - எமர்சன்
  • புது நண்பர்களைப் பெற முடியாதவன், வாழும் கலையை மறந்தவனாவான் - புல்லர்
  • நல்ல மனிதர்களோடு நட்பு வைத்திரு, நல்ல மனிதர்களின் சாயலை அடைவாய் - வில்லியம் ஜேம்ஸ்
  • நட்பு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றது, துயரத்தைப் பாதியாக்குகின்றது - பிரான்சிஸ் பேகன்
  • நல்ல நட்பை இழப்பதை விட, கொஞ்சம் பணத்தை இழப்பது மேலானது - காந்தியடிகள்
  • உன்னுடன் சிரித்து மகிழ்பவர்கள் எல்லோரும், உன் நண்பர்கள் அல்லர் - தோமஸ்.ஏ பெக்கட்
  • பொறாமைக்காரன் நண்பனை இழக்கிறான், கோபக்காரன் தன்னையே இழக்கிறான் - பீட்டர் வெல்ஸ்
  • வளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்து கொள்வார், வறுமை காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்கின்றோம் - இங்கர்சால்
  • நிலையான புத்தி இல்லாதவனையும், போலியானவனையும், நன்றி மறப்பனைவனையும் நண்பனாக்கி கொள்ளாதே - ஜெசி
எல்லா நட்புகளுக்கும் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
http://news.lankasri.com/relationship/03/107031

No comments:

Post a Comment