தொலைக்காட்சி!!

Sunday, August 7, 2016

2016,2017 அமெரிக்கன் கிறீன் கார்ட் விசா அதிஸ்டசாலி நீங்களும் ஒருவரா ?

அமெரிக்காவினால் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வகைமை குடியேற்ற விசா நிகழ்ச்சித் திட்டம் – 2017 (அமெரிக்கன் கிறீன் கார்ட்) விசாவுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஒக்டோபர் 1 ஆம் திகதியில் இருந்து நவம்பர் 3 ஆம் திகதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க குறைந்தது க.பொ.த உயர்தரத்தில் (A/L) மூன்usறு பாடங்களிலும் சாதாரண சித்தி அவசியமானதாகும்.
2017 ஆம் நிதியாண்டில் 50,000 பேர் இத்திட்டத்தினூடாக உள்வாங்கப்பட இருக்கின்றார்கள்.
இதற்கு விண்ணப்பிக்க முகவர்களையோ, தரகர்களையோ நாடவேண்டாம் என எச்சரித்துள்ள அமெரிக்கத் தூதரகம் இதற்கான வழிகாட்டல்களை தமிழிலும் வழங்கியுள்ளது.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பதாரிகள் www.dvlottery.state.gov  என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களை பதிவு செய்துகொள்ளமுடியும்.
மேலும், ஆங்கிலம், சிங்களம், தமிழ்மொழி மூலமான அறிவுறுத்தல்களுக்கு அமெரிக்கத் தூதரகத்தின் இணையத்தளத்தில் http://srilanka.usembassy.gov/visas/diversity-visa-lottery-program.html  என்ற முகவரியினூடாக பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதற்கான பதிவுக் கட்டணம் முற்றிலும் இலவசமாகும்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற இந் நடைமுறையில், குறைந்த அளவில் அமெரிக்காவிற்கான குடியேற்ற எண்ணிக்கையைக் கொண்ட நாடுகளுக்கே வருடாந்தம் இது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.canadamirror.com/canada/67402.html#sthash.rJbwNm8z.Tx2DaOuj.dpuf

No comments:

Post a Comment