தொலைக்காட்சி!!

Friday, July 15, 2016

தமிழ் மாணவி மாயம்!!! லண்டனில் பதற்றம்…?


லண்டனில் உள்ள ஹரோ பகுதியில் வசித்து வந்த, சபீனா கிருஷ்ணப்பிள்ளை என்னும் தமிழ் மாணவி காணமல் போயுள்ளார். 14 வயதுடைய இவர் 13ம் திகதி ஹச் என் என்னும் இடத்தில் வைத்தே காணமல் போயுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஹரோ பகுதியில் உள்ள ஹச் என் ஆட்ஸ் சென்ரருக்கு அருகாமையில் இவர் நடந்து செல்வது இறுதியாக பதிவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.
சபீனா உடல் நிலை குன்றிய நிலையில் இருந்தார் என்றும்.
இதனால் அவர் மாத்திரைகளை உட்கொள்ளவேண்டி நிலையில் காணமல் போயுள்ளார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இது பெரும் வருந்ததக்க விடையம் என்றும், யாராவது இவரை அடையாளம் கண்டால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தோடு தொடர்புகொள்ளுமாறு பொலிசார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இது இவ்வாறு இருக்க தமிழ் மாணவி இவ்வாறு காணாமல் போன விடையம் தொடர்பாக ஹரோ பகுதியில் தமிழ் மக்களிடையே பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது.

No comments:

Post a Comment