தொலைக்காட்சி!!

Saturday, July 16, 2016

எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – குரு பரிகாரம் உள்பட

எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – குரு பரிகாரம் உள்பட
குரு நட்சத்திரம் :- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
ஒன்பது எண்களில் 3-ம் எண்ணிற்குத் தனிச்சிறப்பு உண்டு.தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியது. எப்போதுமே அடுத்தவர்க்குநல்லது மட்டுமே செய்பவர்கள் இவர்கள்தான்.
இவர்களதுதிறமையையும், புத்திசாலித் தனத்தையும் மற்றவர்கள்பயன்படுத்திக்கொண்டு, இவர்களுக்குரிய மரியாதையைச் செய்யமாட்டார்கள். தனக்கு எதிரியான 6 எண்காரர்களுக்கும் இவர்கள்நன்மையே செய்வார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு உதவாமல்,பல பிரச்சினைகளைக் கொடுப்பார்கள்.
தன்னை நம்பி வருவோர்க்கு நிச்சயம் உதவி செய்வார்கள். தங்களைமற்றவர்கள் மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளையும் கேட்கவேண்டும் என்று மட்டும் மிகவும் எதிர்பார்ப்பார்கள். முகஸ்துதிசெய்வதன் மூலம் மற்றவர்கள் இவர்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.
தங்களது உடை விஷயத்திலும், தங்களைஅழகுபடுத்திக் கொள்ளும் விஷயத்திலும் ஆர்வமாக இருக்கமாட்டார்கள். மானத்தை மறைப்பதற்காக உடை அணிகிறோம் என்றுமட்டும் நினைப்பார்கள்.
அடுத்தவர்களிடம் உதவி கேட்டுச் செல்ல மாட்டார்கள். சுயகௌரவம்பார்ப்பது இவர்களது குறைபாடாகும். இதனாலேயே பல நல்லவாய்ப்புகளை இவர்கள் வாழ்க்கையில் இழந்திருப்பார்கள். இவர்கள்பழைய சாத்திரங்கள், பழைய பழக்கங்கள் ஆகியவற்றின் மீது மிகவும்மதிப்பும், மரியா£தையும் கொண்டவர்கள். எனவே, கட்டுப்பாடுகளைமீறப் பயப்படுவார்கள். பெயர் கெட்டு விடுமோ என்று பெரிதும்அஞ்சுவார்கள்.
உயிருக்குச் சமமாக கௌரவத்தைக்காப்பாற்றுவார்கள். இவர்கள் அடுத்தவர்களின் வேலைக்காக மிகவும்அலைவார்கள். இவர்களின் பேச்சில் மனச்சாட்சி, விதி, நேர்மை,பாலம் போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள்.
இவர்கள் சுதந்திரமாக வாழவே பிரியப்படுவார்கள்.
கோயில்நிர்வாகம், ஊர்த்தலைமை போன்ற பதவிகளில் கௌரவமாக (ஊதியம்பெறாமல்) வேலை செய்ய விரும்புவார்கள். அன்பிற்குஅடிபணிவார்கள். அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் அடிபணியமறுப்பார்கள். சில சமயங்களில் ஆவேசமாகவும் எதிர்ப்பார்கள்.கையில் பணமிருந்தால் அழுகுக்காகவும், சிக்கனத்திற்காகவும்(தேவையைப் பற்றிக் கவலைப்படாமல்) பொருட்களை வாங்கிவீட்டில் வைத்துக் கொள்வார்கள்.
சொத்துக்கள் விஷயத்திலும் விட்டுக் கொடுக்கும் குணம் அதிகம்உண்டு. ‘‘என் தம்பிதானே வைத்துக் கொள்ளப் போகிறான், வைத்துக்கொள்ளட்டும்.’’ என்று எதார்த்தமாக நினைப்பார்கள். தங்களதஉரிமையை விட்டுக் கொடுத்து விடுவார்கள். இந்தக் குணத்தால் பலஅன்பர்கள் பிற்காலத்தில் கவலைப்படுவார்கள். இவர்கள்தீனிப்பிரியர்கள். காபி, டீ, டிபன் போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்வார்கள்.
குரு ஆதிக்கம் நன்கு அமையப் பெற்றவர்கள். அன்பிலும், பக்தியிலும்,சிறந்தவர்கள். ஏதாவது ஒரு துறையில் தனித் திறமையைக்காட்டுவார்கள். தேசப்பற்றும் நினைந்தவர்கள். பிறந்த நாட்டிற்காகஉயிரையும் கொடுக்கத் தாயராவார்கள். பொருளாதாரத்தில் மிகவும்உயர்ந்திருப்பார்கள். பார்ப்பதற்குக் கடுமையானவர்களாகத்தோன்றினாலும், வெள்ளை மனதுடன் மற்றவர்களிடம் பழகுவார்கள்.
ஆனால் குரு பலம் குறைந்தவர்கள் கடன் என்னும் பள்ளத்தில் விழுந்துவிடுவார்கள். சிந்திக்காமல் பல காரியங்களில் இறங்கித் தாங்களேசிக்கிக் கொள்வார்கள். சில அன்பர்களுக்குக் காதல் தோல்விகளும்ஏற்பட்டிருக்கும்.
கூட்டாளிகள், நண்பர்கள்
இவர்களுக்கு 3, 12, 21, 30, 9, 18, 27 ஆகிய நாட்களில்பிறந்தவர்களும், கூட்டு எண் 3 மற்றும் 9 என வரும் அன்பவர்களும்மிகவும் உதவுவார்கள். மேற்கண்ட எண்களில் பிறந்தவர்களைக்கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் வைத்துக் கொள்ளலாம். 2ம்எண்களாலும் நன்மை ஏற்படும்.
1 எண்காரர்களின் மூலம் சில நன்மைகள் ஏற்பட்டாலும் அவை நீண்டநாட்களுக்கு நீடிக்காது. 6, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களிடமும்கூட்டு எண் 6, 8 வரும் அன்பர்களிடமும் கவனமாக இருக்க வேண்டும்.3ம் தேதிக்காரர்களை இவர்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்வார்கள்.
திருமண வாழ்க்கை
இவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து(பிறந்த எண் அல்லது விதி எண்) கொண்டால், வாழ்க்கைப் பயணம்,இனிமையாக இருக்கும். 2 எண்காரர்களையும் மணந்து கொள்ளலாம்.இவர்களை அனுசரித்துப் போவார்கள்.
இவர்களின் நோய்கள்
இவர்களுக்குத் தோல் வியாதிகள்தான் முதல் எதிரி.பெரும்பாலோருக்கு வயிற்று வலியும், மலச்சிக்கலும், வாய்வுக்கோளாறுகளும் உண்டு. வாய்ப்புண், குடல் சம்பந்தமான நோய்களும்ஏற்படும். மூச்சுப் பிடிப்பு, சொறி சிரங்கு போன்றவைகளாலும்அடிக்கடி தொந்தரவுகள் உண்டு.
நெல்லிக்கனியும், எலுமிச்சை மற்றும் கீரை வகைகளையும் அடிக்கடிஉணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை உடலுக்குஉறுதியையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கும்.
இவர்களுக்கான தொழில்கள்
இவர்களுக்கு ஆசிரியர், சோதிடர்கள் போன்ற அறிவைத் தூண்டும்தொழில்கள் சிறப்பு தரும். நல்ல அரசு உத்தியோகங்கள் கிடைக்கும்யோகம் உண்டு. தர்ம ஸ்தாபனங்களில் உத்தியோகம் கிடைக்கும்.பேச்சாளர்கள் இவர்கள் சிறந்த நுண்ணிய சாத்திர ஆராய்ச்சியார்கள்,ஆலோசனையாளர்கள் போன்ற துறைகளிலும் பிரகாசிப்பார்கள். பலஅன்பர்கள் புத்தக விற்பனையாளர்களாகவும், பள்ளிகள் நடத்துபவர்களாவும் இருப்பார்கள்.
அரசியல் ஈடுபாடும் ஏற்படும். (உ.ம். கலைஞர் கருணாநிதி) நன்கு பிரகாசிப்பார்கள். எழுத்தாளர்கள்,பேப்பர் கடைகள், அச்சுத் தொழில் ஆகியவையும் இவர்களுக்கு நன்குஅமையும். கல்லூரிப் பேராசிரியர்கள், தத்துவப் பேராசிரியர்கள்,மேலாளர்கள் போன்ற தொழில்களும் சிறப்புத் தரும். இராணுத்திலும்நன்கு பிரகாசிப்பார்கள்.
குருவின் யந்திரம் & குரு & 27
10 5 12
11 9 7
6 13 8
குருவின் மந்திரம்
தேவா நாஞ்ச ரி(ரீ)ணாஞ்ச
குரும் காஞ்சந ஸ்ந்(நி)பம்
புத்திதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்
எண் 3 சிறப்புப் பலன்கள்
இந்த எண் தேவர்களுக்குக் குருவான பிரஹஸ்பதியினுடையது.எல்லோருக்கும் நல்ல ஆலோசனைகள் சொல்வதும், நல்ல வழிகாட்டுவதும் இவர்கள்தான். ‘‘குரு பார்க்க கோடி நன்மை’’ என்கிறதுசோதிடம். இந்த 3ம் எண்காரர்களால் உலகத்தில் உள்ள மற்றஅனைவருக்கும் நன்மைகளே ஏற்படும். இவர்களிடம் மற்றஅனைவரையும் விடத் தாங்கள்தான் அறிவிலும், அதிகாரத்திலும்உயர்ந்து விளங்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்கேற்றஉழைப்பும் உண்டு. பிறரைக் கட்டுப்படுத்தி, தனது ஆதிக்கத்தைச்செலத்த வேண்டும் என்கிற தீவிர எண்ணங்களும் உண்டு.
எந்த ஒருசெயலிலும் கட்டுப்பாடும், ஒழுங்கும் இருக்க வேண்டும் என்பார்கள்.தங்களுடைய மேலதிகாரிகள், முதலாளிகள் போன்றவர்களுக்குமிகவும் விசுவாசமாகவும், உண்மையாகவும் இருப்பார்கள்.மனச்சாட்சி பார்த்துச் செயல்படுவார்கள். எனவே, வியாபாரத்திலும்அல்லது உத்தியோகத்திலும் வெகுவிரைவில் முன்னேறி விடுவார்கள்.
இவர்களது கண்டிப்பான நடத்தையின் மூலம் சில எதிரிகளும்ஏற்பட்டு விடுவார்கள். கர்வம் ஓரளவு வந்து விடும். அடுத்தவரைப்புகழ்ந்து பேசத் தயங்குவார்கள்.
சுதந்திர எண்ணங்களும்,அடுத்தவர்களை விட மேலே இருக்க வேண்டும் என்று தீவிரஎண்ணமும் உண்டு. உலகம் பாராட்டும் ஆன்மீகத் தலைவராகவோ,ராஜதந்திரியாகவோ, தங்களை வருத்திக்கொண்டு தியாகங்கள் புரியும்தேசியத் தலைவர்களாகவோ விளங்குவார்கள் இவர்களே.
சுவாமிவிவேகானந்தர், இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்த பாபுஇராஜேந்திர பிரசாத் போன்ற மகான்கள் எல்லாம் இந்த எண்ணில்பிறந்தவர்களே. நாணயம், பண்புடைமை, ஒழுக்கம் போன்றநற்குணங்கள் நிறைந்தவர்கள். கடுமையான உழைப்பாளிகள். 3ன்பலம் குறைந்தால் இவர்களது உழைப்பினை எளிதான மற்றவர்கள்பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் நல்ல பெயர் பெறுவார்கள். பலஅன்பர்கள் ஆசிரியர்களாகவும் கல்லூரிப் பேராசிரியர்களாகவும்இருப்பார்கள். இவர்கள் மதப்பற்றும், தங்களது பண்பாடு, கலாசாரம்போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடும், நம்பிக்கையும் உடையவர்கள்.
புதிய நாகரிக முன்னேற்றங்களைக் குறை கூறுவார்கள். பிறருடையநிர்ப்பந்தங்களுக்காக எந்த ஒரு ஒவ்வாத செயலையும் செய்யமாட்டார்கள். இதனாலேயே பழமைவாதிகள் என்று முத்திரைகுத்தப்படுவார்கள். இவர்களது பேச்சு உரையாடல்களில் இறைவன்,விதி, நியாயம் போன்ற வார்த்தைகள் அதிகம் காணப்படும். குறுக்குவழியில் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளத் தயங்குவார்கள்.
தங்களது விடாமுயற்சியும், சலியாத உழைப்பினாலும் எப்படியும்முன்னேறி விடுவார்கள். தங்களுடைய இயல்புக்கும், தகுதிக்கும்அப்பாற்பட்ட பதவியை அடைய விரும்ப மாட்டார்கள். அந்தஸ்து,கௌரவம் பார்ப்பதால், மற்றவர்களுக்குக் கடின மனத்தினர்கள் போல்தோன்றுவார்கள். இவர்களுக்குச் சமூகத்தில் நல்லவர், வல்லவர் என்றபெயர் கிடைக்கும். அதனால் பண விஷயக்ளில் லாபத்தைஎதிர்பார்க்க மாட்டார்கள். பொதுவாகப் பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் படிப்பில் 3ம் எண்காரர்கள் சிறந்து விளங்குவார்கள்.
3ம் எண்ணின் வலிமை குறைந்தால் தன்னம்பிக்கை குறையும்.இதனால் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி, முன்னேற வகையறியாதுபலர் முடங்கிக் கிடப்பார்கள். இந்த எண்களில் பிறந்த பலதிறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேறாததற்கு இதுதான் காரணம்.கடன்கள், எதிரிகளால் பாதிப்பு எண்ணின் பலம் குறைந்தால் நிச்சயம்ஏற்படும். இந்த திறமைசாலிகளைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டு, தங்களின் திறமை என விளம்பரப்படுத்திக் கொண்டு,புகழ்பெறுவது சில தந்திரசாலிகளின் நடைமுறையாகும்.
எனவே, குருவின் (3), ஆதிக்க நிலை உணர்ந்து, எண்ணின் பலத்தைஅதிகரித்துக் கொண்டால், பொருளாதாரத்தில் முன்னேற்றம்,அரசாங்க ஆதரவு, தொழில் முன்னேற்றம் நிச்சயம் ஏற்படும்.இவர்களுக்குப் பெரிய சிரமங்களும், துன்பங்களும் வராது. அப்படிவந்தாலும், வெகு நாட்கள் இருக்காது. வந்த சுகதுக்கங்கள்அனைத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்வார்கள். பல 3ம் தேதிஅன்பர்கள் புகழ்மிக்க எழுத்தாளர்களாகவும், கலைஞர்களாகவும்விளங்குகிறார்கள்.
காதல் விவகாரங்கள் இவருக்கு வெற்றியைத் தருவது இல்லை.தங்களது கலாசாரத்தை விட்டு வெளியே வரத் தயங்குவார்கள். நல்லமனைவி இயற்கையாகவே அமைந்து விடுவார்கள். 3, 9, 1 ஆகியதேதிகளில் பிறந்தவர்களை மணந்தால், நல்ல குடும்ப வாழ்க்கைஅமையும். வீண் செலவுகள் அதிகமாகச் செய்வார்கள். ரேஸ், லாட்டரிபோன்ற துறைகளில் அதிர்ஷ்டம் குறைவுதான்.
எண் 6க்குப் பகையாக இருப்பதால், 3ம் எண்காரர்கள் தங்களதுபெயரில் (தனியாக) அசையாச் சொத்துக்கள் வாங்கக் கூடாது.அனுபவத்தில் பல பிரச்சினைகளைக் கொடுக்கும். தனது மனைவிபெயரிலோ அல்லது இருவரின் கூட்டுப் பெயரிலோ வாங்கலாம்.மற்றவர்களை ஏமாற்றி, அதன் மூலம் வருமானம் பெற விரும்பமாட்டார்கள். சட்டத் தொழில் செய்பவர்கள், நீதிபதிகள், வக்கீல்கள்,ஆன்மீகத் தலைவர்கள் இந்த எண்காரர்களே, வங்கி, இன்சூரன்ஸ்போன்ற அரசு உத்தியோகங்களை அடையலாம். ஜோதிடம்,ஆன்மீகம் மாந்தரிகம் போன்றவற்றில் ஈடுபாடு மிக உண்டு.
பெரிய வியாபாரத்தை நடத்தினாலும் நியாயமான லாபத்தையேஎதிர்பார்ப்பார்கள். இவர்களை நம்பிக் காரியங்களை ஒப்படைத்தால்,தங்களை உயிரைக் கொடுத்தாவது அவற்றைச் செய்து முடித்துவிடுவார்கள். நாணயஸ்தர்கள்.
உடல் அமைப்பு
நடுத்தரமான உயரமுடையவர்கள். முகமானது சற்று நீண்டிருக்கும்.புருவங்கள் அடர்ந்தும் நீண்டும் இருக்கும். பெரிய உதடுகள் அமையும்.பல் வரிசையாக இருக்கும். தலைமுடி நரைத்தல், வழுக்கை விழுதல்இளமையிலேயே ஏற்படும். கம்பிரமான உடல் அமைப்பு உண்டு.
அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்
தங்கம் சிறந்த உலோகமா-கும். பொன்நிற உடைகள் அதிர்ஷ்டத்தைத்தரும். செவ்வந்திக் கல் எனப்படும் கற்கள் மிகவும் யோகமானவை.புஷ்பராகம் கற்களும் நல்ல பலன்களைத் தரும். கனகபுஷ்பராகம்கல்லும் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்
தாமரைப் பூ நிறமே சிறந்தது. கத்திரிப்பு நிறம் மற்றும் நீலம் கலந்தவண்ணங்ககள் சிறப்புத் தரும். மஞ்சள் நிறமும் நன்மைஅளிக்கக்கூடியதே.
கருநீலம், கருப்பு, பச்சை நிறங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நாட்கள்
ஒவ்வொரு மாதத்திலும் 3, 9, 12, 18, 21, 27, 30 தேதிகள் மிகவும்அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதேபோன்று கூட்டு எண் 3 அல்லது 9வரும் எண்களும் பலன்களைத் தரும்.
ஒவ்வொரு மாதத்திலும் 6, 8, 15, 17, 24, 26 ஆகிய தேதிகளிலும்,கூட்டு எண் 6 அல்லது 8 வரும் தேதிகளிலும் புதிய முயற்சிகளைத்தவிர்த்துவிட வேண்டும்
இப்போது 3 எண் குறிக்கும் நாளில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்பற்றிப் பார்ப்போம்.
3 ஆம் தேதி பிறந்தவர்கள்
சிறந்த சிந்தனையாளர்கள். தங்களுடைய ஆற்றலை ஆக்கரீதியாகப்பயன்படுத்திவெற்றி காண்பார்கள். பொறியியல், கணிதம்,விஞ்ஞானம் போன்ற ஏதாவது ஒரு துறையில் வல்லுநர்களாகவருவார்கள். சிறந்த எழுத்தாளராகவும் இருப்பார்கள். கதை, கவிதைபோன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். 21 வயதிற்கு மேல்தான்நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
12-ஆம் தேதி பிறந்தவர்கள் : வாழ்க்கையில் தனியாகப் போராடப்பிறந்தவர்கள். தாய், தந்தையின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும்.உறவினர்களால் பயன் இல்லை. பேச்சிலே இணையற்றவர்கள்.அதிகாரமாகப் பேசி தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள்.இவர்களது பெற்றோரின் பொருளாதார நிலையும் பாதிக்கப்படலாம்.மற்றவர்களுக்காகவே உழைப்பார்கள். படிப்பு, தொழில் ஆகியவற்றில்இவர்கள் சுயமாகவே போராடி முன்னேறி விடுவார்கள். வறுமையானஇளமை வாழ்வைத் தவிர்க்க முடியாது! தங்கள் தகுதியை வளர்த்துக்கொண்டால் நீதிபதிகள், வக்கீல்கள், பேராசிரியர்கள் ஆகிய பெரும்பதவிகள் தேடிவரும்.
21 ஆம் தேதி பிறந்தவர்கள்
எப்போதும் தங்களின் நலன் பற்றியே சிந்திப்பவர்கள். தங்களுக்குப்பிரயோசனமாக இருக்கும் தொழில்களிலேயே நாட்டம்செலுத்துவார்கள். வாழ்க்கையின் முன் பகுதியில் பல ஏற்றத் தாழ்வுகள்மூலம் நல்ல அனுபவங்களைப் பெறுவார்கள். பலமுறைதோல்விகளைச் சந்தித்தாலும் சலிக்காமல் உழைப்பார்கள். நடுவயதில்இவர்கள் பல வாழ்க்கைப் பிரச்சினைகளை சந்திப்பார்கள். உலகத்தில்புதிதாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்துச்செயல்படுவார்கள். அதன் மூலம் பெரும் புகழும், செல்வமும்அடைவார்கள். எழுத்தும், பத்திரிகைத் தொழிலும் நன்கு அமையும்.
தங்களது வாழ்க்கையின் பிற்பகுதியில், தாங்கள் பெற்றஅனுபவங்களைக் கொண்டு, ஆனந்தமான வாழ்க்கை வாழ்வார்கள்.அலைபாயும் (2 எண்) வாழ்க்கையானது இவர்களது திட்டமிட்டஉழைப்பால் இன்ப வாழ்வாக (1 எண் ) மாறி விடும். காரணம்சந்திரன் சூரியனுடன் சேர்ந்து மூன்றாக மாறுவதால், நல்ல பிற்காலஇன்ப வாழ்க்கை உண்டு.
30 ஆம் தேதி பிறந்தவர்கள்
மிகுந்த திறமைசாலிகள், பணத்தைவிடச் சுயதிருப்தியை பிரதானமாகநினைப்பார்கள். எதையும் துருவித் துருவி ஆராயும் குணம் உண்டு.உயிராபத்து வந்தால் கூட பயப்படாமல் சாதனை செய்யவிரும்புபவர்கள். பொருளாதாரத்தில் திருப்திகரமான நிலைஇருக்காது. ஊதாரித்தனமாக பணத்தைச் செலவழித்துப் பின்புவருந்துவார்கள். ஒற்றர்கள், தூதர்கள், துப்பறிவாளர்கள்போன்றவர்கள் இந்த எண்காரர்களே. கௌரவம் எப்போதும்கிடைக்கும். தனிமையிலே சிந்திப்பதில் நாட்டம் உள்ளவர்கள்.அரசியல் தொடர்பும் ஏற்படும். பலருக்கும் வழுக்கையும், நரையும்விரைவில் ஏற்படும். படிப்பறிவைக் கொடுக்கும் எண் இது.
எண் 3 க்கான (குரு) தொழில்கள்
குருவுக்கே உரிய ஆலோசனைத் தொழில்கள் (Consultancy) ஆசிரியர்,பேராசிரியர் போன்ற தொழில்கள் மிகப் பொருத்தமான தொழில்கள்!நிர்வாக சக்தி மிகுந்தவர்களாக இருப்பதால் அரசியல், நிர்வாகம்,வங்கி போன்ற தொழில்களில் பிரகாசிப்பார்கள். பல மொழிகளின்மீது நாட்டம் கொள்வார்கள். அறிவுத் தாகம் கொண்டு எதையாவதுபடித்துக் கொண்டே இருப்பார்கள். வயது இவர்களுக்குத்தடையில்லை. மேலும்
நீதித்துறையிலும், வழக்கறிஞர், கோவில் அறப்பணிகள்போன்றவையும் இவர்களுக்குள்ள தொழில்கள். ஆன்மீகப்பேச்சாளர்கள், சோதிடர்கள், புத்தகம் வெளியிடுதல், எழுதல், பொதுகௌரவப் பணிகள் போன்றவையும் இவர்களுக்கு ஒத்த தொழில்கள்.
அரசியல் துறையிலும் மிக உயர்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். MLA, MPபோன்ற பதவிகளும், அமைச்சர் பதவிகளும் தேடி வரு. அரசாங்கநிறுவனங்கள், இராணுவம் போன்றவற்றிலும் தலைமைப்பொறுப்புகளை ஏற்று நன்முறையில் செய்வார்கள். மற்றவர்களுக்குஆலோசனை செய்வதிலும், காரியங்களை திறம்பட ஏற்றுநடத்துதலிலும் வல்லவர்கள். ஆனால் எதுவும் முறைப்படி நடக்கவேண்டும் என எதிர்ப்பார்கள். மிகச் சிறந்த குமாஸ்தாக்கள்,கணக்காளர்கள் இவர்களே.
நவக்கிரக மந்திரங்கள் – வியாழன் (குரு)
குரு (வியாழன்) தொடர்பான பிரச்சனைகள் மற்றும் குரு தசை அல்லதுகுரு அந்தர் தசையின் போது:
குருவின் கடவுளான சிவபெருமானைத் தினமும் வழிபடவேண்டும்.
தினசரி ஸ்ரீ ருத்ரம் படிக்க வேண்டும்.
குரு மூல மந்திர ஜபம்:
“ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஷக் குரவே நமஹ”,
40 நாட்களில் 16000 முறை சொல்ல வேண்டும்.
குரு ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
தேவானாம் ச ரிஷஷீணாம் ச
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!!
தமிழில்,
குணமிகு வியாழக் குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்!
பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
கிரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்!!
தொண்டு: வியாழனன்று நன்கொடையாக குங்குமப்பூ அல்லதுமஞ்சள் அல்லது சர்க்கரை கொடுக்கவேண்டும்.
நோன்பு நாள்: வியாழன்.
பூஜை: ருத்ர அபிஷேகம்.
ருத்ராட்சம்: 5 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
காயத்ரி மந்திரம்
வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி|
தந்நோ குரு: ப்ரசோதயாத்||
குரு தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 11 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
சங்கீத முமூர்த்திகளில் ஓருவரும், வேத விற்பன்னருமான
ஸ்ரீ மான் முத்துசாமி தக்ஷிதர் அருளியது.
குரு பகவான் கீர்தனைகளை அடாணாராகத்தில்
குரு பகவான் கீர்த்தனம் – பல்லவி
ப்ருஹஸ்பதே தாராபதே ப்ரும்மஜாதே நமோஸ்துதே (ப்ரு)
அனு பல்லவி
மஹா பலவிபோ கீஷ்பதே மஞ்ஜூ தநுர்மீனாதி பதே
மஹேந்த்ராத்யுபாஸிதே ஆக்ருதே- மாதவாதி விநுததீமதே (ப்ரு
சரணம்
ஸூராசார்ய வர்யவஜ்ரதர – ஸூபலக்ஷண – ஜகத்ரய குரோ
ஜராதி வர்ஜித – அக்ரோத – கசஜநக – ஆஸ் ரிதஜந கல்பதரோ
புராரி – குருகுஹ – ஸம்மோதித – புத்ரகாரக – தீநபந்தோ
பாரதி சத்வாரி – வாக்ஸ்வரூப – ப்ரகாசக – தயா ஸிந்தோ
நிராமயாய – நீதிகர்த்ரே – நிரங்குசாய – விச்வபாத்ரே
நிரஞ்ஜநாய – புவநபோக்த்ரே – நிரம்சாய – மகப்ரதாத்ரே
தாரையின் பதியே, பிராமண குலத்தில் தோன்றியவரே, மகாபலசாலியே, அழகிய தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியே,மஹேந்த்ராதிகளால் உபாசிக்கப்பட்ட உருவுள்ளவரே, புத்தி மிககொண்டவரே, கிழத்தனமற்றவரே, மூவுலக குருவே,
உன்னை அண்டி வந்தவருக்கு கற்பக விருட்சமே, சிவனுக்கு குருவானகுஹனுக்கு சந்தோஷம் தருபவரே, ஏழைகளின் பந்துவே, மிகப்பிரகாசமானவரே, நோயற்றவரே, நீதி சாஸ்த்ர கர்த்தாவே,பற்றற்றவரே, உலகினை அனுபவிப்பவரே, அம்சமில்லாதவரே, யாகபலனை தருபவரே, கோபம் இல்லாதவரே, கருணையின்வடிவானவரே உமக்கு நமஸ்காரம்.
குரு பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்
ராசி தனுசு, மீனம் திக்கு வடக்கு
அதி தேவதை வியாழன் ப்ரத்யதி தேவதை இந்திரன்
தலம் திருச்செந்தூர், ஆலங்குடி வாகனம் அன்னம்
நிறம் மஞ்சள் உலோகம் தங்கம்
தானியம் கடலை மலர் வெண்முல்லை
வஸ்திரம் மஞ்சள் நிற ஆடைகள் ரத்தினம் புஷ்பராகம்
நைவேத்யம் கடலைப் பொடி அன்னம் சமித்து அரசு
பிற நவக்கிரக தலங்களில் அந்தந்த கிரகங்கள் சிவ பெருமானைவழிபட்டு பேறு பெற்றிருக்கும் ஆனால் இங்கு சிவனேதட்சிணாமூர்த்தியாய் அருளுகிறார். காசியில் இறக்க நேர்ந்தால், காசிவிஸ்வநாதர் இறப்பவரது காதில் இறக்கும் முன் ” ராம நாமம் ” சொல்லி முக்தியடையச் செய்வதாக ஐதீகம். அது போல், இத்தலத்தில் ஈசன் ” பஞ்சாட்சிர மந்திரம் ” உபதேசிப்பதாக நம்பிக்கை.பஞ்சாட்சிர மந்திரத்தை தொடர்ந்து ஜபிப்பவர்களை பூதம், பிரேதம்,பைசாச, வேதாளம் போன்றவை நெருங்குவதில்லை. எல்லா விதமானநோய்களும், துனபங்களும் அகலும் என்கிறது ” காசியாரண்யமகாத்மியம் “. குரு பகவானின் அருளாசி கிடைக்க ஆலங்குடி வந்து அவரை 24தீபங்கள் ஏற்றி அர்ச்சித்து 24 முறை வலம் வர வேண்டும். வியாழக் கிழமைகள்தோறும் விரதம் இருப்பதாலும், தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்வதாலும்குரு பார்வை கிடைக்கும். இத் தலத்தில் விஷ ஜந்துக்கள் தீண்டி யாரும்இறப்பதில்லை.
குரு பகவான் தோஷங்கள் நீங்கிட
குரு பகவானுக்கு, வியாழக் கிழமைகளில் அபிஷேகம் செய்து, மஞ்சள்நிற வஸ்திரம் உடுத்தி, புஷ்பராக மணிகள், வெண் முல்லைமலர்களால் அலங்கரித்து, அரசஞ் சமித்தினால் யாஹம் செய்து, குருபகவானுக்குரிய மந்திரங்கள் ஓதி, கடலைப் பொடி, எலுமிச்சம் பழஅன்னம் நைவேத்யம் வைத்து, அடாணா ராகத்தில் குரு கீர்த்தனைகள்பாடி, தீப தூபம் காட்டி வழிபட வேண்டும்.
குரு பகவான் புத்திர, பொருள் மற்றும் கருமங்களின் காரகன். தெய்வபக்தி, ஆலோசனை, உபதேசம், ஆசாரம், புத்தி, யுக்தி, புகழ், ஞானம்,பொறுமை, புஷ்பம் போன்றவைக்கு காரணமானவர். குரு பார்வைஇருந்தாலேயே திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் கிட்டும். வியாழக்கிழமைகள்தோறும் விரதம் இருந்து ஆலங்குடி சென்று வழிபடுவதும்,தெட்சிணாமூர்த்தியையோ அல்லது நவக்கிரக குரு பகவானையோ 24தீபங்கள் ஏற்றி 24 முறை வலம் வந்து தரிசிக்க குரு தோஷம் நீங்கும்.
சிறப்பான சில குறிப்புகள்
எண் : 3
எண்ணுக்குறிய கிரஹம் : குரு
அதிர்ஷ்ட தேதிகள் : 3, 5, 9,12,14,18, 21, 23, 27,30
அதிர்ஷ்ட கிழமை : வியாழன், திங்கள்
அதிர்ஷ்ட மாதங்கள் : மார்ச், செப்டம்பர், டிசம்பர்
அதிர்ஷ்ட ரத்தினங்கள் : கனகபுஷ்பராகம் அல்லது எந்த கல்லும் இல்லாத தங்கநகைகள்
அதிஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பொன் நிறம், ஆரஞ்சு போன்ற செம்மையான நிறங்கள்
அதிர்ஷ்ட தெய்வங்கள் : தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், ப்ரம்மா
அதிர்ஷ்ட மலர்கள் : முல்லை, சம்பங்கி
அதிர்ஷ்ட தூப, தீபம் : சந்தனம்,சாம்பிராணி கலந்தது மருதாணி,குங்குல்யம் கலந்தது
அதிர்ஷ்ட சின்னங்கள் : யானை, புலி, தங்கஆபரணம், தந்தம்,கெஜலட்சுமி
அதிர்ஷ்ட மூலிகைகள் : சிவனார்வேம்பு, குப்பைமேனி
அதிர்ஷ்ட யந்திரங்கள் : ஸ்ரீசக்ரம், தட்சிணாமூர்த்தி யந்திரம்,அஷ்டமாசித்தி யந்திரம்
அதிர்ஷ்ட எண் : 3, 9
அதிர்ஷ்ட உலோகம் : தங்கம்
ஆகாத எண் மற்றும் கூட்டுத்தொகை : 8
ஆகாத தேதிகள் : 6, 15, 24
ஆகாத நிறம் : கருப்பு, கருநீலம், ஆழ்ந்தபச்சை

01.நீங்கள் எண் 1 ல் பிறந்தவரா?? சகல பலன்களும் பிறப்பு முதல் இறப்பு வரை!

02.எண் 2 ல் பிறந்தவருக்குரிய சகல பலன்கள்! பிறப்பு முதல் இறப்பு வரை


astrlgi 003


No comments:

Post a Comment