Wednesday, May 18, 2016

மகாராணியின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்


  • பிரித்தானிய மகாராணி ஆற்றிய உரையில் முக்கிய அம்சமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சிறைகளை சீரமைப்பது முக்கிய பணியாக அரசிற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
  • குறிப்பாக, சில விதிகளின் அடிப்படையில் வார இறுதி நாட்களில் வீட்டிற்கு அனுப்பப்படும் சிறைக் கைதிகள் சாட்டிலைட் மூலம் கண்காணிக்கப்படுவார்கள்.
  • உள்ளூர் பாடசாலைகள் உள்ளிட்டு நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு பாடசாலைகளும் ‘அக்காடமி’ அந்தஸ்த்து பெறும்.
  • நாடு முழுவதும் குழந்தைகள் நல மையங்களில் தற்போது உள்ள வசதி வாய்ப்புகள் மேம்படுத்தப்படும்.
  • விண்வெளி விமானங்கள் மற்றும் வணிக விண்வெளி நிலையங்களுக்கான வளர்ச்சி பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
  • ஓட்டுனர்கள் இல்லாத வாகனங்களை தயாரிக்கவும் அத்துறையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்துறையை சார்ந்தவர்களுக்கு தேவையான காப்பீடும் வழங்கப்படும்.
  • வர்த்தகம் மற்றும் தனிநபர் உபயோகத்திற்காக ட்ரோன் எனப்படும் சிறிய விமானங்களின் சேவை விரிவுப்படுத்தப்படும்.
  • NHS மூலம் பிரித்தானியாவில் வசிக்கும் வெளிநாட்டு குடிமகன்களால் இழக்கப்பட்ட நிதியை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஒவ்வொரு வீட்டிற்கும் அதிவேகமாக இயங்கும் இணையத்தள வசதி(Broadband) ஏற்படுத்தப்படும்.
  • சர்க்கரை கலந்த குளிர் பானங்களுக்கு 2018 முதல் வரி விதிக்கப்படும்.
  • சமூகத்தை உயர்த்தும் பொருட்டு தன்னார்வமிக்க இளைஞர்களை தேசிய சேவை பணியில் அமர்த்துவதை கூடுதலாக விரிவுப்படுத்தப்படும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் மகாராணியின் உரையில் இடம்பெற்றுள்ளன.
முதல் இணைப்பு
பிரித்தானிய நாட்டின் ஆளும்கட்சியான கன்சர்வேட்டிவ் அடுத்து என்னென்ன திட்டங்களை செயபடுத்து உள்ளனர் என்பது தொடர்பான மகாராணி எலிசபெத்தின் நேரடி உரை சற்று முன்னர் பாராளுமன்றத்தில் தொடங்கியுள்ளது.
பிரித்தானிய அரசு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பான உரையை அந்நாட்டு மகாராணியான இரண்டாம் எலிசபெத் ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார்.
இதனடிப்படையில், இன்று காலை 11.30 மணியளவில் கூடிய பாராளுமன்ற கூட்டத்திற்கு வந்த மகாராணி தற்போது தனது அரசாங்க உரையை தொடங்கியுள்ளார்.
மகாராணியின் உரையில் பிரித்தானிய நாட்டு சிறையமைப்பை மாற்றியமைப்பது, பிரித்தானிய பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான மசோதாவை நிறைவேற்றுதல், நாட்டிற்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை தடுப்பது, நாட்டில் ஓட்டுனர் இல்லாத வாகனங்களை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடன் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மகாராணியின் உரை முடிந்த பின்னர், அதன் மீது ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment