Friday, April 8, 2016

பேஸ்புக் இணையத்தளப் பக்கத்தில் இஸ்லாமுக்கு எதிராக எழுதிய மாணவன் வெட்டிக்கொலை.!


பேஸ்புக் இணையத்தளப் பக்கத்தில் மதத்துக்கு எதிரான தனது கண்ணோட்டத்தை வெளிப்படுத்திய சட்ட மாணவர் ஒருவர் வெட்டுக் கத்தியால் வெட்டி புதன்கிழமை பின்னிரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நஸ்முதீன் சமாத் (26 வயது) என்ற மேற்படி சட்ட மாணவர் மதத் தலைவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சம்பவ தினம் டாக்கா பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள சந்தியில் சென்று கொண்டிருந்த அவரை மோட்டார் சைக்கிளில் வந்த 3 ஆயுததாரிகள் நெருங்கி அவரது தலையை கத்தியால் வெட்டிய பின் அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது நஸ்முதீன் சமாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஜகன்னாத் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்ட கற்கைநெறியை கற்று வந்த அவர் தனது பேஸ்புக் இணையத்தளப் பக்கத்தில் ‘எனக்கு மதம் கிடையாது’ என்ற தலைப்பின் கீழ் மத தீவிரவாதத்திற்கு எதிரான கருத்துகளை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த வொரு குழுவும் உரிமைகோரவில்லை. கடந்த வருடம் அந்நாட்டில் மதச் சார்பற்ற 4 இணையத்தள எழுத்தாளர்கள் மத கடும் போக்காளர்களால் வெட்டிக் கொல்லப்பட் டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment