தொலைக்காட்சி!!

Thursday, April 21, 2016

கொள்ளுப்பாட்டியின் மடியில் அமர்ந்து போஸ் கொடுத்த குட்டி இளவரசி: பிரித்தானிய மகாராணியின் பிறந்தநாள் ஸ்பெஷல்


பிரித்தானியாவின் ராணி எலிசபெத் அவர்கள் இன்று தனது 90 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு,தனது பேரரக்குழந்தைகள் மற்றும் கொள்ளுப்பேரப் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
ராணி எலிசபெத்திற்கு, சார்லஸ்,ஆண்ட்ரிவ், எட்வர்ட் என்ற 3 ஆண்மகன்களும், அன்னி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இதில், மகன்கள் மற்றும் மகளுக்கு பிறந்த குழந்தைகளான, வில்லியம், ஹரி, பீட்டர்,சாரா, பியாட்ரிக், இயூஜின், லூயிஸ் மற்றும் ஜேம்ஸ் என 8 பேரக்குழந்தைகளும், சவானா,இஸ்லா, ஜோர்ஜ் மற்றும் சார்லோட் என 4 கொள்ளுபேரக்குழந்தைகளும்உள்ளனர்.
இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தனது 4 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 3 பேரக்குழந்தைகளுடன் அமர்ந்து Windsor - இல் உள்ள Green Drawing Room - இல் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தில், குட்டி இளவரசி சார்லோட் தனது ராணியின் மடியில் அமர்ந்திருக்கிறார், மற்றும் மற்றொரு கொள்ளுப் பேரக்குழந்தையான மியா டின்டால், ராணியின் பேக்கினை கையில் வைத்துக்கொண்டு கம்பீரமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
மற்ற குழந்தைகள் அனைவரும் ராணியை சூழந்து நிற்கின்றனர், இந்த புகைப்படம் Annie Liebovitz என்ற புகைப்படக்காரரால் எடுக்கப்பட்டுள்ளது.
No comments:

Post a Comment