தொலைக்காட்சி!!

Saturday, April 16, 2016

தமிழக சினிமா துறையினரால் தொடர்ந்தும் யாழ்ப்பாணம் குறிவைக்கப்படுவதேன்???
ஈழ தமிழனுக்கு ஈழத்தில் உள்ள இந்திய தூதுவரும் விஜய் tv கலைகுடும்பமும்சிலஇலங்கைஅரசின்கைகூலிகளும்சேர்ந்துநடாத்தும்தமிழ்அழிப்புசெயல்கவனம்தேவை.
ஒரு நண்பரின் முகநூல் பதிவு....
யாழ்ப்பாணத்தான் சற்று சிந்திக்க வேண்டிய விடயம்.... முழுமையாக வாசியுங்கள்....)
தமிழக சினிமா துறையினரால் தொடர்ந்தும் யாழ்ப்பாணம் குறிவைக்கப்படுவதேன்???
பொதுவாக யாழ் மக்களின் உறவுகள் புலம்பெயர் நாடுகளில் வசிப்பதால் அங்கிருந்து பெரும் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் சக்தி FM நிறுவனமும், யாழில் உள்ள இந்திய உளவுத்துறையின் சதி மூலமும் ஒரு உளவியல்ரீதியான போரைத் தொடுத்துள்ளனர் எமது மக்கள் மீது !!
குறிப்பாக கிழக்கிலும் தமிழர்கள் அதிகமாக இருந்தும் ஏன் யாழை குறிவைத்து இந்த இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும்???
ஏன் கொழுப்பில் தமிழர்கள் இல்லையா??
மிகப்பெரிய கலை அரங்குகள் இருந்தும் அடிப்படை வசதியற்ற மானிப்பாயிலுள்ள செல்ல முத்து மைதானத்திற்கு ஏன் வரவேண்டும்??
தமிழக சினிமா துறையினர் பொதுவாக எதையும் டிபெறன்டா பண்ணுவார்கள் பந்தாஸ்டிக்கா வரவேண்டும் என்தற்காக,இப்படி சொல்லும் தெளுங்கு கும்பல் அதுவும் தமிழே சரியாக புரியாதவர்கள் ஏன்? எதற்கு? எப்படி? இங்கு வரவேண்டும்???
கடந்த 60, 70, 80 காலங்களில் தமிழர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பெரும் வளர்ச்சியடைந்திருந்ததால், அவர்களே அரசியல் எழுச்சியையும், புரட்சியையும் செய்தார்கள்!
இந்த உணர்ச்சியை மழுங்கடித்து அவர்களின் அறிவு வளர்ச்சியின் முதுகெலும்பை உடைக்கும்
முயற்சியாகவே இதைப்பார்க்கிறேன்!
இதற்கு சம்பந்தப்பட்டவர்களை வன்மையாக கண்
டிக்கிறேன்!
இன்றைய யாழ் மக்களின் மனநிலையென்ன???
பணம் வருகிறது நினைத்த சாப்பாடு, உணவு, உடை, வாகனம், கணனிபாவனைகள், சினிமா, தொடர் நாடகம், மது, சூது, எங்கும் விபச்சார விடுதிகள் இளைஞர்களுக்கு வித விதமான இரவு நடன களியாட்டங்கள்!
கோயில்கள் கட்டுதல், மூடநம்பிக்கைகளை வளர்த்தெடுத்தல் போன்ற இவை மனித வளர்ச்சியை பிற்காலத்திற்கு கொண்டு செல்லுமே தவிர எதுவும் பயன் தரமாட்டாது!
இதனால் எம் பெண்களிடம் உலக அறிவோ, இயற்கை பற்றிய இயற்கையான அறிவோ அல்லது இலக்கியறிவோ, இடது சாரிகொள்கைகளோ, பொருளாதாரம், வரலாறு, இன்றைய எமது அரசில் அறிவோ எதுவும் மற்ற கொடிய நோய்களுக்கு ஆளாகித்தவிக்கிறார்கள்!!
யாழில் எங்கு பார்த்தாலும் புற்றுநோய், சலரோகம், கிட்னி பாதிப்பு, எய்ட்ஸ் என உயிரைக்கொள்ளும் நோய்கள் தாண்டவமாடுகிறது! இவை அனைத்துமே கடந்த 2009 பிறகே அதிகமாக காணப்படுகிறது!!!
கல்வியில் சிகரத்தை தொட்ட எமது யாழ் சமுதாயத்தில் இன்று நடந்த க, பொ, த பரீட்சையில் பங்கு பெற்ற மாணவர்களின் வீழ்ச்சி ஆதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது!
அதாவது இலங்கையிலேயே கடைசிக்கு சில முதல் மாவட்டமாக வந்ததை எண்ணி வருந்தப்பட வேண்டியுள்ளது! இத்தனை பொருளாதார வசதிகளுமற்ற போர்க்கால சூழ்நிலையில் எமது மாணவர்கள் கல்வியில் உச்சத்தில் இருந்தார்கள்!
இதன் வீழ்ச்சிக்கு என்ன காரணம்???
புலம்பெயர் உறவுகள் உழைக்கும் பணம் அவர்களுக்கு அங்கு சரியாக போதாத போதும் மிகவும் சிரம்ப்பட்டு சேமித்த பணத்தை அனுப்புகிறார்கள்,
இங்குள்ளவர்கள் விலை உயர்ந்த மோட்டார்
சைக்கிளில் உலா வருவதும், விலையுயர்ந்த கைபேசிகள், பெறுமதியான மது அருந்திவிட்டு வன்முறைகளிலும், வாகன விபத்திலுத்திலும் சிக்குப்பட்டு சின்னா பின்னாமாகி மரணிக்கிறார்கள்! அல்லது உளவில் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்!!
சொந்த இனத்தையே குடித்து விட்டு ஒரு வருக்கொருவர் வெட்டிக் கொலை செய்யப்படுகிறார்கள், இதற்கு சாதியம்
பெரிய பிரச்சினையாகவுள்ளது!
சமூக நீதிக்கான அல்லது விழிப்புணர்வுகளை எந்த தமிழ் அரசியல் கட்சிகளும் முன்னெடுப்பதில்லை, இவர்களுக்கு தேவையான தேர்தல் நேரம் வந்து முதலில் கையிலெடுப்பது,
இளைஞர்களுக்கான புதிய வேலை வாய்ப்பு இவர்களின் வேலை முடிந்தவுடன் இந்த பக்கமே நினைத்துப்பார்க்க மாட்டார்கள்!!
எனவே எமது எதிர்கால அரசியல், பொருளாதாரம், இருப்பு அத்தனையும் எமது கண்முன் அன்னியர்களால் பறிபோகிறது என்பதை மனதில் கொண்டு புலத்தில் இருக்கும்
அறிவு சார்ந்த அரசியல் பொருளாதாரம் தெரிந்தவர்கள் எமது மக்களுக்கு தொடர்ந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
எதிர் வரும் மே 17 நினைநாளை மக்களின் மனதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்ற பல சதிகளை இந்திய ஆரிய வர்க்கமும், சில தமிழ் விரோத சக்திகளும் இணைந்து செயற்படுகின்றனர் என்பதுதான் உண்மை!
சில தமிழ் சோம்பேறிகள் சொல்லக்கூடும் கலையை கலையாக பார்க்கவேண்டுமென சொல்லி பல நடுநிலை வாதிகளின்
கருத்தை நம்பி நாசமாகப்போகாமல் நம்பிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருப்போம்
ஒற்றுமையாக, ஒன்றாக, ஒரே அணியில்!
இந்த தெளுங்கு கும்பல் நாம் போரில் செத்து மடிந்த போதும், இரத்தம், கண்ணீர் , வேதனை, தவிப்பு என எமது உறவுகள் கதறும் போது ஒரு சிறு வார்த்தை கூட பேசாமல் குளிர்ந்த அரங்கில் இருந்து மானாட மயிலாட நிகழ்ச்சியை நடத்தி பல கோடிகளை பார்த்த அயோக்கியர்கள்!
இன்று எமது கண்ணீர் காய முன் எமது பணம்
தேவைப்படுகிறது என்றால் இவர்களின்
நோக்கமென்ன???
எனவே எமது உறவுகள் கொஞ்சமும் தாமதிக்காமல் இவர்களைக் கொண்டு வந்தவர்களை கடுமையாக கண்டிக்க வேண்டும்.
ஏன் என்றால் எமக்கு மானமும், அறிவும் நிறைய உண்டு!!! — thinking about making a change.

No comments:

Post a Comment