Tuesday, March 22, 2016

கனடா ரொரன்ரோ முன்னாள் மேயர் றொப் போட் காலமானார்!





கனடிய தமிழ் மக்களிற்கு நன்கு அறிமுகமான முன்னாள் ரொரன்ரோ மேயர் றொப் போட் ரொரன்ரோவில் புற்று நோயினால் இன்று காலமானார் என கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
கடந்த சில காலமாக புற்று நோயினால் அவதிப்பட்டிருந்த அவர், இன்று காலமானார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இறக்கும் பொழுது அவருக்கு 46 வயது.
இரண்டாம் இணைப்பு
டொரொண்டொ பகுதியின் முன்னாள் மேயரான ரோப் போர்ட் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.
கனடாவை சேர்ந்த றொப் போர்ட் (Rob Fort 46) அரசியல் தலைவராகவும், தொழிலதிபராகவும் திகழ்ந்தவர். டொரொண்டோ பகுதியின் மேயராக இருந்த இவர் பணியின் போது அலுவலகத்திலேயே போதைப்பொருள் மற்றும் மது பயன்படுத்தியதற்காக உலகப் புகழ் பெற்றவர்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து புற்றுநோயுடன் போராடி வந்த அவர் 18 மாத போராட்டங்களுக்கு பிறகு இன்று மரணமடைந்தார்.
இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தங்கள் குடும்பத்தில் பாசமிகு மகனாகவும் சகோதரனாகவும் கணவராகவும் தந்தையாகவும் திகழ்ந்துவந்த றொப் போர்ட் தனது 46 வயதில் மரணமடைந்து விட்டார் என்பதை கனத்த இதயத்துடனும் ஆழ்ந்த கவலையுடனும் போர்டு குடும்பம் தெரிவித்துக்கொள்கிறது என கூறப்பட்டிருந்தது.
தொழிலதிபராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் பின்னர் அரசியலில் நுழைந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு மேயர் தேர்தலில் வென்ற போர்ட் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர்.
குறிப்பாக கடந்த 2013ஆம் ஆண்டு தனது அலுவலகத்திலேயே அவர் போதைப்பொருள் எடுத்துக்கொண்டது மற்றும் மது அருந்தியது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ மூலம் போர்ட் உலக அளவில் பிரபலமானார்.
தற்போது டொரொண்டோவின் Etobicoke North பகுதியின் கவுன்சிலரான அவர் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மரணத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment