தொலைக்காட்சி!!

Sunday, September 6, 2015

வயலின் மேதை உருத்திராவதி ராதாகிருஸ்ணன் (இணுவில்) மரண அறிவித்தல்!


இசையரங்கில் இறைவன் அழைத்தானே மாபெருங்கலைஞன்.இணுவில் உருத்திராபதி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிரிவு வருத்துகிறது.எங்கள் துர்க்காதேவி மண்டபத்தில் அன்பாக உறவாடி,சுவாமி வலம் வரும்போது வாசலில் தரிசித்து புன்முறுவலுடன் மேடைக்குப் போனவர் முதலாவது பாடல் வாசித்து இரண்டாவது பாடல் இசைக்க ஆரம்பித்த வேளை .....

மேடைநோக்கி பலர் ஓடினார்கள்.கண்டேன் அவர்முகம்.நொடிப்பொழுதில்வைத்தியசாலை அனுப்பிவைத்து மகளுக்கு ஆறுதல் சொன்னேன்.செய்தி வந்தது.ஆறமுடியவில்லை.கண்ணுக்கு முன்னால் ....... 

இருதினங்களுக்கு முன்னும் மணிமண்டபத்தில் இருமணிநேரம் என்னோடு பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.இன்றும் வந்தவுடன் என் அறைவாசல் வந்து...

தம்பி வந்துவிட்டேன் என்று கையைப்பற்றிய காட்சி....
கனவா நனவா யான் அறியேன்.


தகவல் ஆறு திருமுருகன்

No comments:

Post a Comment