தொலைக்காட்சி!!

Thursday, August 6, 2015

அழிவின் ஆரம்ப நாள்! அமெரிக்காவினால் போடப்பட்ட முதலாவது அணுகுண்டுஉலக வரலாற்றில் முதலாவது அணுகுண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, இருண்ட யுகத்திற்குள் தள்ளப்பட்டு இன்றுடன் 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
1945ம் ஆண்டு லிட்டில்பாய் எனும் 4000 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த பி-29 ரக எனோலாகெய் என்ற அமெரிக்க விமானம், ஹிரோஷிமா நகரின் மையப் பகுதியில், உலகின் முதல் அணுகுண்டை வீசியது.
எதற்கு அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதலை மேற்கொள்ள ஹிரோஷிமா நகரைத் தெரிவு செய்தார்கள், ஜப்பானால் ஏன் இந்த தாக்குதலை நிறுத்த முடியாமல் போனது, அமெரிக்காவினால் ஹிரோஷிமாவில் போடப்பட்ட முதலாவது அணுகுண்டு ஹிட்லரையும் ஜேர்மனியையும் அழிப்பதற்கு உருவாக்கப்பட்டது போன்ற பல அறியாத தகவல்களை லங்காசிறி வானொலியில் நேற்று இரவு இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார் ஆய்வாளர் சுரேஸ் தர்மா..

No comments:

Post a Comment