Tuesday, August 4, 2015

நோயாளியின் வலியை தமது உடம்பில் உணர்ந்துகொள்ளும் மருத்துவர்: மருத்துவ உலகில் அதிசயம்



பாஸ்டன் பகுதியில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் நரம்பியல் நிபுணராக பணியாற்றி வருபவர் மருத்துவர் ஜோயல் சலினாஸ். இவர்தான் தம்மிடம் வரும் நோயாளிகளின் வலியை தாமே உணர்ந்துகொள்பவர்.
மருத்துவ கல்லூரிகள் கற்றுத்தராத, அபூர்வ சித்தி வாயிலாக மருத்துவர் ஜோயல் உலகெங்கும் அறியப்படுபவராக திகழ்ந்து வருகிறார். mirror-touch synesthesia எனப்படும் அபூர்வ நிலைதான் மருத்துவர் ஜோயலிடம் காணப்படுவதாக நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் வாயிலாக தமது சிறு வயது முதற்கொண்டே மருத்துவர் ஜோயல் அடுத்தவர்களின் உடல் மற்றும் மன வலிகளை தாமே உணர துவங்கினார்.
தாம் பார்த்துக்கொண்டிருக்கையில் எவரேனும் ஒருவரை கன்னத்தில் அறைந்தால் அதே வலி தமக்கும் இருப்பதாக தெரிவித்திருக்கும் மருத்துவர் ஜோயல், எவரேனும் இருவர் தமது கண் முன்னர் ஆரத்தழுவிக் கொண்டாலும் அதே உணர்வு தமக்கும் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.
முன்னர் மருத்துவக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது நோயாளி ஒருவரது கை வெட்டி நீக்குவதை கண்கூடாக கண்ட மருத்துவர் ஜோயலுக்கு தமதுக்கும் அந்த உணர்வு ஏற்பட்டதாக குறிப்பிடும்போது, அவருடன் பணியாற்றும் மருத்துவர்கள் வியப்பு மேலிட கேட்டு நிற்கின்றனர்.
ஜோயலின் இந்த நிலை குறித்து அவரது தாயார் தெரிவிக்கையில், அவர் இதுவரை வலி அல்லது எவ்வித உணர்வுகளையும் அதிகமாக வெளிப்படுத்தியதில்லை என்றார்.
இதுபோன்ற அரிய மருத்துவ நிலையில் உலகில் 2 சதவிகிதத்தினர் மட்டுமே இருப்பதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment