தொலைக்காட்சி!!

Tuesday, August 4, 2015

பிரித்தானியப் பெண் – வல்லுறவால் பாரிய பரபரப்பு…..

பிரித்தானியப் பெண்ணொருவர் பல்கேரியாவில் கொலை செய்யப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேன் பென்னட் என்ற 67 வயதான பெண்ணொருவரே வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

அவர் 3 மாதங்களுக்கு முன்னரே அந்நாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். குறித்த பெண் தனது நாயுடன் வெளியே சென்ற வேலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவரது சடலம் , அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


அப்பெண்ணின் கணவர் 70 வயதானவர் எனவும் அவர் நோயாளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நீண்ட நாட்கள் துருக்கியில் வசித்து வந்த தாகவும் பின்னரே பல்கேரியாவுக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பலரது எச்சரிக்கையையும் மீறியே அவர் அந்நாட்டுக்கு குடிபெயர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.London Girl 01London Girl 02London Girl 03London Girl 04London Girl

No comments:

Post a Comment