தொலைக்காட்சி!!

Monday, August 3, 2015

ரஜரட்டையில் தவறான காதல், இணையத்தில் கசிந்த படங்கள்.

ரஜரட பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட மாணவியை கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்கி படமெடுத்ததுடன் , அவரை வல்லுறவுக்கும் உட்படுத்திய நபரொருவர் ரகசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பீடத்தில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்று வருபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அம்மாணவியும் , குறித்த மாணவனும் காதலித்து வந்துள்ளனர். எனினும் பின்னர் அம்மாணவி அந்நபரை பிரிந்துள்ளார்.
பின்னர் வேறொருவருடன் அம் மாணவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தெரிந்துகொண்ட சந்தேகநபர் அம்மாணவியை கட்டாயப்படுத்தி ஹோட்டலொன்றுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி , படமும் எடுத்துள்ளார்.
பின்னர் இதனை வைத்து அம் மாணவியை மிரட்டி வந்துள்ளார். படங்களையும் மின்னஞ்சலில் அவருக்கு அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து மாணவி ரகசிய பொலிஸில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவர்  படங்களை பலவகையிலும் பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


AppleMark
AppleMark

No comments:

Post a Comment