Tuesday, August 4, 2015

மது விலக்கு கோரி பெண்கள் மது குடிக்கும் போராட்டம்..பேருந்து மீது கல்வீச்சு: தமிழகத்தில் பதற்றம்

தமிழகத்தில் முழுமையான மது விலக்கை அமல்படுத்த இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 
முழு அடைப்பு போராட்டத்துக்கு மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இன்று நடந்து வரும் டாஸ்மாக் எதிர்ப்பு பந்த்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மதுக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் தா. வெள்ளையன் ஆதரவு தெரிவித்துள்ளதால் அந்த அமைப்பினர் தமிழகம் முழுவதும் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க பல இடங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுவிலக்கிற்காக போராடி வரும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மதுரையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மதுக்கடைகளை மூடக்கோரி சென்னையில் பெண்கள் மது குடிக்கும் போராட்டம் நடத்துகின்றனர்.
சென்னை பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையில் பெண்கள் மது பாட்டில்கள் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நாகர்கோவில், திருவட்டாறு உள்ளிட்டப் பகுதிகளில் இதுவரை 2 கேரள அரசுப் பேருந்துகள் உட்பட 20 பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment