தொலைக்காட்சி!!

Sunday, August 2, 2015

லண்டனில் கொல்லப்பட்டது பின் லேடனின் தங்கச்சி: பொலிசார் வெளியிடும் தகவல் !


பிரித்தானியாவின் புறநகர்ப் பகுதியான ஹம்பஷியாரில் , 7 மில்லியன் பவுன்டுகள் பெறுமதியான தனியார் ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொருங்கியுள்ளது. இச்செய்தியை ஏற்கனவே நாம் வெளியிட்டு இருந்தோம். இதில் பின் லேடனது உறவினர்கள் பயணித்தார்கள் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. குறித்த இந்த விமானத்தில் பின் லேடனின் தங்கச்சியும் அவரது மெய்ப்பாதுகாப்பாளரும் மற்றும் உறவினர்கள் இருவரும் பயணித்துள்ளார்கள் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர் பிரித்தானியப் பொலிசார். பின் லேடனின் மற்றுமொரு சகோதரி மற்றும் சில உறுப்பினர்கள் இன்னும் பிரித்தானியாவில் தான் வசித்து வருகிறார்கள்.
அவர்கள் பெரும் கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். லண்டனில் அவர்கள் சென்றுவர கார்களை பயன்படுத்துவது இல்லை. அவர்களிடம் சொந்தமாக விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் உள்ளது என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment