Monday, August 3, 2015

தமிழ் மொழி போல் உலகில் வேறெங்கும் காண முடியாது: தமிழை விரும்பும் சீனப் பெண்

சீன மாணவி ஒருவர் தன் தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார்.
சீன வானொலி தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணிபுரியும் நிலானிக்கு அவருடைய பெற்றோர் வைத்த பெயர் ஹூ லீ யுவான்.
கடந்த 10 ஆண்டுகளாக அறிவிப்பாளராகப் பணிபுரியும் நிலானி, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதத் தமிழ் டிப்ளமோ படிப்பு படித்துவருகிறார்.
நிலானி கூறுகையில், நான் சீனாவில் தமிழ் மொழியில் படித்துப் பட்டம் பெற்றேன்.
ஆனால் எனக்கு தமிழ்நாட்டில் புழங்கும் பேச்சுத் தமிழ் அவ்வளவாகத் தெரியவில்லை.
கொச்சைத் தமிழில் பேசுவதைக் கேட்கும்போது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சீனாவில் பலர் தமிழைப் படிப்பதைப் பெருமையாக நினைக்கிறார்கள்.
மேலும், பெய்ஜிங், ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் நடத்தும் கூட்டங்களுக்கு நாங்கள் செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment