Sunday, August 2, 2015

பெற்றோல் குண்டுகளுடன் சிக்கிய யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் !

சுன்னாகம் பெட்றோல் குண்டு பிணை வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் கூறிய கருத்துக்கள் மிகவும் முக்கியமானதொன்றாகும். யாழ் பல்கலைக் கழகத்தின் கௌரவம் மிகவும் முக்கி;யமானது. அது பாதுகாக்கப்பட வேண்டுமானால், பல்கலைக்கழக மாணவர்கள் நீதிமன்ற குற்றக் கூண்டில் நிற்கக் கூடாது என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். இது தொடர்பில் பெற்றோர்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அபாயகரமான ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் பெட்றோல் குண்டு, வாள், பொல்லு மற்றும் ஆயுதங்களுடன் யாழ் பல்கலைக்கழகத்தின் 2 மாணவர்கள் உட்பட 10 இளைஞர்களை சுன்னாகம் பொலிசார் கைது செய்திருந்தனர்.
மல்லாகம் நீதிமன்றம் இவர்களை விளக்கமறியலில் வைத்து விசாரணைகளை நடத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த இளஞைர்களை பிணையில் விடுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை மல்லாகம் நீதவான் நிராகரித்திருந்தார். இதனையடுத்து, கைது செய்யப்பட்டிருந்த 2 பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு, இவர்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 30 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த, வழக்குத் தவணையின்போது, இந்த, மேன் முறையீட்டு பிணை மனு மீதான விசாரணையை, முடிவுக்குக் கொண்டு வந்தபோதே நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையையும், அறிவுறுத்தலையும் விடுத்துள்ளார்.
இதேவேளை சற்று திறம்பட நீதிமன்றம் செயல்பட்டுள்ளது. அது என்னவென்றால் படு பயங்கரமான ஆயுதங்கள் என்ற வகைக்குள் பெற்றோல் குண்டும் வருகிறதா இல்லையா என்பதனை ஆராய்ந்து தமக்கு கூறுமாறு நீதவான் உத்தரவிட்டார். இதனை அடுத்து ஆராய்ந்த அதிகாரிகள் பெற்றோல் குண்டு படு பயங்கரமான ஆயுத வரிசையில் வராது என்று கூறினார்கள். இதனை அடுத்து குறித்த 10 மாணவர்களுக்கும் தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment