Sunday, August 2, 2015

பொலிசில் பிடிபட்ட நபர் தனது விரல் ரேகையை தானே கடித்து சாப்பிடுகிறார்

]

அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்தில் பொலிசார் ஆபிரிக்க நாட்டவர கைதுசெய்துள்ளார்கள். போதையில் காரை செலுத்தினார் என்று அவர் கைதாகினார். அவரை தமது வாகனத்தில் வைத்திருந்த பொலிசாருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. காரணம் என்னவென்றால் , குறித்த நபர் தான் மாட்டிக்கொள்ளாமல் இருக்க தனது கைவிரலின் நுனிப் பகுதிகளை கடித்து தசையை சாப்பிட ஆரம்பித்துவிட்டார். அமெரிக்காவில் பெரும்பாலும் கைரேகை கொண்டு தான் குற்றவாளிகளை அடையாளம் காணுவது வழக்கம். குறித்த நபரது கை ரேகை ஏற்கனவே பொலிஸ் நிலையத்தில் பதிவாகி இருந்தால். அவரை மிகவும் இலகுவாக யார் என்று கண்டு பிடிக்க முடியும்.
nail man by athirvu
இதனை தடுக்க , பொலிஸ் நிலையம் செல்ல முன்னரே அன் நபர் தனது ரேகை இருக்கும் இடங்களை கடித்து சாப்பிடுகிறார். இந்த கோரமான காட்சிகள் அனைத்தும் பொலிஸ் CCTV கமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. உலகில் எத்தனை விதமான மனிதர்கள் பார்த்தீர்களா. இவர்களைப் போன்றவர்கள் தம்மை காத்துக் கொள்ள எதனையும் செய்வார்கள்.

No comments:

Post a Comment