தொலைக்காட்சி!!

Wednesday, August 5, 2015

மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அழகுராணி இவர் தான் !

கொலம்­பி­யாவைச் சேர்ந்த அழ­கு­ரா­ணி­யொ­ருவர், போதைப்­பொருள்கடத்தல்குற்­றத்­திற்­காகசீனாவில் மரணதண்­ட­னையை எதிர்­நோக்­கி­யுள்ளார். ஜூலி­யானாலோபஸ் எனும்இந்த அழ­கு­ராணி யுவதி சீனா­வுக்கு கொகேய்ன் எனும் போதைப்­ பொ­ருளைகடத்திச் சென்­ற­தாக குற்றம்சுமத்­தப்­பட்­டுள்ளார். அவரை சீன அதி­கா­ரிகள் கடந்தமாதம் 18 ஆம் திகதி கைதுசெய்­தனர்.
22 வய­தானஜூ லி­யானாலோ பஸ், கொலம்­பி­யாவின் வட­மேற்கு பிராந்­தி­ய ­மொன்றின் அழ­கு­ரணிபோட்­டி­ யொன்றில் முத­லிடம் பெற்று முடி­சூட்­டப்­பட்­டவர். கடந்தவாரம் மிஸ்வேர்ல்ட் கொலம்­பிய அழகு­ராணிபோட்­டி­யிலும் அவர் பங்­கு­பற்­ற­விருந்தார்.ஆனால், தற்­போது அவர் சீனசிறைச்­சா­லை­யொன்றில் விளக்­க­ம­றியல் கைதி­யாக உள்ளார்.
மடிக்­க­ணி­னி­யொன்­றுக்குள் வைத்து போதைப்­பொ­ருளை கடத்திவந்­த­தாக சீன அதி­கா­ரிகள் அவர்­மீது குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். சீனாவில் போதைப்­பொருள் கடத்தல் குற்­றங்­க­ளுக்கு ஆயுள்­ தண்­டனை அல்­லது மரணதண்­டனை விதிக்­கப்­ப­டலாம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இறு­தி­யாக பாரிஸ் நகரில் வைத்துதம்­முடன் ஜூலி­யானாதொடர்­பு­ கொண்டார் என அவரின் குடும்­பத்­தினர் தெரி­வித்­துள்­ளனர்.

No comments:

Post a Comment