தொலைக்காட்சி!!

Tuesday, August 4, 2015

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட குடியேற்றவாசிகள் தொடர்பான விதிகளை கடுமையாக்கும் பிரித்தானியா

பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை முறியடிப்பதற்கான புதிய நடவடிக்கைகளின் பிரகாரம். அந்நாட்டில் வாழ்வதற்கான உரிமையை இழந்த குடியிருப்பாளர்களை வீட்டு உரிமையாளர்கள் வெளியேற்ற எதிர்பார்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பிரகாரம் பிரித்தானியாவில் தங்கியுள்ள குடியேற்றவாசிகளின் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில், சில சமயங்களில் நீதிமன்ற உத்தரவொன்று இல்லாமலேயே வீட்டு உரிமையாளர்கள் அவர்களை வெளியேற்ற முடியும் என பிரித்தானிய அமைச்சர்கள் கூறுகின்றனர்.
ஒருவருக்கு குத்தகையொன்றுக்கான இணக்கப்பாட்டை தெரிவிப்பதற்கு முன்னர் அவரது குடியேற்றவாசிக்கான அந்தஸ்தைப் பரிசீலிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான விதிகளை திரும்பத் திரும்ப மீறும் நில மற்றும் வீட்டு உரிமையாளர்கள் 5 வருடத்திற்கு மேற்பட்ட சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் புதிய திட்டத்தின் கீழ் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களுக்கான நிதி ஆதரவும் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர்கள் கூறுகின்றனர்.
புகலிடக் கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் சுமார் 10,000 குடியேற்றவாசிகள் வாரமொன்றுக்கு அந்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் தலா 36 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான தொகையை நிதியுதவியாக பெற்று வருகின்றனர். அவர்கள் பிரித்தானியாவில் தமது குடும்பங்களுடன் வாழ்வதாலேயே இந்த நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேற்படி நடவடிக்கைக்கு அந்நாட்டு தேசிய நில உரிமையாளர்கள் சங்கத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி றிச்சர்ட் லம்பேர்ட் வரவேற்பளித்துள் ளார்.

No comments:

Post a Comment