தொலைக்காட்சி!!

Tuesday, August 4, 2015

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது உஷார்,


இன்றைய செய்திதாளில் பார்த்தேன் திரு வைகோ அவர்களின் தாயார் நடத்திய போராட்டம்,மதுஒழிப்பு பற்றி அந்த தாயாரும் புதல்வரும் பேச தகுதியே கிடையாது ,காரணம் இளைஞர்கள் மதுபழக்கத்திற்கும் ,இங்கு ஏராளமானோர் மாரடைப்பால் இறப்பதற்கும் காரணம் புகை பழக்கம். ஆனால் இன்று ஏதோ தான் தூய்மையானவன் என மக்கள் நம்புவதாக நினைத்துகொண்டு இளைஞர்களின் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் அக்கறை உள்ளவராக தன்னை அடையாளம் காட்டி கொள்ள துடிக்கிற திரு.வைகோதான் தென்தமிழகத்தின் மிகப்பெரிய சிகரட் விநியோகஸ்தகர் ,அவருடைய மகன் திரு.துரைவையாபுரி அதை நிர்வகித்து வருகிறார்.

இலட்சகணக்கான குடும்பத்தை சீரழித்து சூனியமாக்கும் போதைவஸ்தான சிகரட் விற்பனையை அடிப்படை தொழிலாக இருபைத்தாண்டுகளாக செய்து வரும் இவர் மதுவை ஒழிக்க போகிறாராம் .சாத்தான் வேதம் ஓதலாமா,இதறகும் மேலாக தன் மகனும் குடும்பமும் என்ன தொழில் புரிகிறார்கள் என்று திரு வைகோவின் தாயாருக்கு தெரியாதா? இல்லை இது நாஞ்சிலார் கருணாநிதியை சொன்னது போல் 'கருவின் குற்றமா?" தமிழகமே சிந்தித்து பார் ,உனக்காக போராடுகிறேன் என்று கூவும் ஒவ்வொருவனும் தன் சுயநலத்துகாக உன்னைதான் பலியிட்டு கொண்டிருக்கிறான்.

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது உஷார்...

அருணா மைந்தன்

No comments:

Post a Comment