தொலைக்காட்சி!!

Wednesday, August 5, 2015

இலங்கையின் மீது சர்வதேச கவனம் திரும்ப அன்று தேயிலை..! இன்று பிரபாகரன்...! நாளை....?உலக நாடுகள் அனைத்தும் இலங்கையினை உற்றுப் பார்க்கின்ற நிலைக்கு அன்று இலங்கை தேயிலை பிரதானகாரணமாக அமைந்திருந்தது.
அதனை உற்பத்தி செய்த தோட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் அடிமைகளாகவும் அடிப்படை நாளாந்த தேவைகளுக்காக போராட்டத்தினையே நம்பி அன்று முதல் இன்று வரை வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் இலங்கையின் அந்நியச் செலாவணிகளை அள்ளிகொடுத்தும் கிள்ளிகொடுக்காத அரசியலுக்குள் சிக்குண்டு வாழ்ந்துக்கொண்டும் இருக்கின்றார்கள்.
இம் மக்களோ இலங்கை அரசின் சகல பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களிலும் ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இருப்பதுமே வரலாற்று உண்மையாகும்.
இந்நிலையில் இந்தக் கட்டுரையினை வரைவதற்கு நாம் எடுக்கும் காரணம், வரப்போகும் தமிழ் இனத்திற்கான முக்கிய பாராளுமன்றத் தேர்தலாகும்.
இதில் தமிழ் மக்களின் ஒரே ஒரு நாள் முடிவு அடுத்து ஐந்து வருடங்களுக்கு ஆதிக்கம் செலுத்தப்போகின்றது. இலங்கையில் சிறுபான்மை என கூறப்படும் இந்த தமிழ் இனம் சிங்களவருக்கே சிறுபான்மை இனம் ஆனால் தமிழரை பொறுத்தவரையில் இதுவே எமது பெரும்பான்மையாகும்.
காரணம் வட- கிழக்கு மாகாணங்களில் வாழும் பெரும்பான்மை இனம் தமிழினமே. ஆண்ட பரம்பரை அறிவு சார்ந்த பரம்பரை, நிபுணத்துவம் வாய்ந்த பரம்பரை அதனைப்போல மலையக இந்திய தமிழ் மக்களோ உழைக்க தெரிந்தவர்கள்.
ஆனால் உரிமையினை கேட்க தெரியாதவர்கள். இந்த இரு பகுதியை சார்ந்த தமிழ் இனத்தின் பலமும் பலவீனத்தையும் வெளியோரால் சாதாரணமாக அறிந்துக்கொள்ள முடியாது.
இந்த இரு பகுதியில் உள்ளவர்களிடம் யாராவது இவர்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமாயின் அதனை நேரில் கேட்பார்களாயின் வட- கிழக்கு பகுதியினை சார்ந்தவர்கள் அறிவு பூர்வமான முறையில் தங்களை பற்றிய கேள்விகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு தெரியாத புரியாத வகையில் பதில் கூறி தங்களின் சமார்த்தியத்தினை காட்டிவிடுவார்கள்.
அதனைப்போல மலையக பகுதியில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள் அப்பாவி போலவும் பதிலில் எதை எதையோ கூறிக் கொண்டு என்ன அவர்கள் கேட்டார்கள் என்பதனை அவர்கள் குழம்பும் நிலையை ஏற்படுத்திவிடுவார்கள்.
ஆகவே இரண்டு பகுதியிலும் திறமையான பதில் இருக்கின்றது என்பது மட்டும் உண்மை ஆனால் யாராலும் புரிந்துகொள்ள முடியாது.
இந்நிலையில் மலையக மக்களை மடக்கி அடக்கிக்கொள்ள அரசும் அதன் அடிவருடிகளும் அவர்களின் வழியில் அன்றாடம் அவர்களுக்கு அவசியப்படும் பொருட்களுடன் ஊடாகவே சென்று அம்மக்களை திருப்திபடுத்தி அன்றாட தேவைகளை மாத்திரம் வழங்கி தங்களின் காரியங்களை சாதித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
இது அவர்களை தொடர்ந்து கையேந்தும் பரம்பரையாகிவிட்டது.
இதன் மூலம் இன்றுவரை அவர்களுக்குத் தேவை அன்றைய தினத்திற்கு எதுவோ அது கிடைத்துவிட்டால் அதற்காக தங்களின் உழைப்பு மற்றும் உரிமையினை மறந்து கேட்பவர்களின் அடிமையாகுவதால் அடிமை வாழ்வுதான் இன்றும் தொடர்கின்ற நிலை.
வடக்கு கிழக்கு பகுதியை நாம் எடுத்தால் பலரும் பகுத்தறிவின் மூலம் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பினும் இவர்கள் பலத்தினை சிதறடிக்க சிங்களம் இன்று நேற்றல்ல பல ஆயிரம் வருடங்களாக ஏதோ ஒருவகையில் தனது நரிதந்திர சூழ்ச்சிகளை செய்து அவர்களுக்கு கௌரவம் அளிப்பதைப்போல பதவிகளை கொடுத்து அதிகாரத்தினை கொடுப்பது போல் தெரிந்தாலும் கொடுக்காது அதில் மயங்க வைத்து அதன் மூலம் இந்த இனத்தின் சாதாரண மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றது.
இது மறைமுகமாகவே அன்று முதல் இன்று வரை நடக்கின்றது. இலங்கை என்றும் வட இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க, இந்நாட்டு ஆட்சியாளர்கள் பழங்காலம் முதல் செயற்பட்டு வருகின்ற போதும் இந்திய அரசு தமிழர்கள் முன் அவர்களை காக்கும் காப்பாளன் என்ற மாயையை தோற்றுவித்து தமிழ் இனத்தினை தனது நலனுக்காக பழிவாங்குகிக்கொண்டே இன்றுவரை இருக்கின்றது.
இலங்கையில் முதலில் சிங்களம் குடியேறியது அதன்பின் வடக்கு கிழக்கு தமிழர்கள் தொடர்ச்சியாக இந்திய வம்சாவழியினர் வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்த பிரதான மூவினமும் இந்தியாவில் இருந்து வந்தவர்களே அப்படி இருந்தும் இந்த இந்தியா ஏன் தமிழர்களை மட்டும் பழிவாங்கும் செயற்பாடுகளை தனது சுயநலத்திற்காக சிங்களத்துடன் சேர்ந்து பகிர்ந்து கொள்கின்றது என்பது புரியாத புதிராக இருக்கின்ற போதும்,
தோட்ட தமிழ் மக்களையும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களையும் பலமான சமுதாயமாக இருக்கவிடாது பலவீனத்துடனேயே வாழ இலங்கை சிங்கள அரசுக்கு உதவிவருகின்றது இந்திய அரசு. உதவி செய்வது போல பிரச்சனைகளையே அதிகரிக்க செய்து வருகின்றது அது.
இந்நிலையில் வடக்கில் இருந்து தமிழ் மக்களுக்காக அவர்களின் உரிமைகளுக்காக சுயமரியாதைகளுக்காக இந்நாட்டில் ஆட்சியாளர்களின் பாகுபாடான செயல்திட்டங்களுக்கான எதிர்ப்பினை வெளி உலகத்திற்கு எடுத்து சென்ற மாவீரன் பிரபாகரன்.
அவரை உலகமே போற்றிய வேளையில், பிரபாகரன் உலகப் புகழ் படைத்த ஒரே தமிழ்த் தலைவனாக வந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழருக்காக வாழ்வதாகக் கூறி தனது குடும்பத்தினையே சொகுசு வாழ்வில் மூழ்கவைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க.தலைவன் கருணாநிதியைப் போலவே கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அலிசகிர் மௌலானா, கருணா, பிள்ளையான் போன்றவர்கள் மூலம் பலவீனப்படுத்தப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம்.
அதே பாணியில் தமிழ் மக்களின் பலத்தினை பலவீனப்படுத்தும் வகையில் பல ஒட்டுக் குழுக்கள் சிங்கள அரசியல்வாதிகள் நிதியில் வாழ்க்கை நடாத்தும் சுயநல தமிழ் அரசியல்வாதிகள் சுயேட்சைகுழுக்கள் என்றும் பலநூறு பேர்கள் தேர்தல் களத்தில் பல்வேறு கோணங்களில் வேசமிட்டு தமிழ் மக்களின் வாக்கு பலத்தை பலவீனமாக்க கங்கனம் கட்டிக்கொண்டு உலாவருவதையும்,
அவர்கள் தங்களின் நாளாந்த தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு அறிவித்து அவர்கள் வீசும் எலும்பிற்காக(நிதி) தெரு நாயாக இருப்பதனையும் வடக்கு கிழக்கு மற்றும் தமிழ் மக்கள் வாழும் ஏனைய பிரதேசங்களில் காணக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையை மாற்றவேண்டும். அதனை தொடர்ந்து இன்றும் உலகமே மதிக்கும் சர்வதேச அங்கீகாரத்துடன் தேயிலைக்குப் பின் மதிப்பிற்குரிய தேசிய தலைவர் பிரபாகரனுக்குப் பின் ஜனநாயக இயக்கமாக இருந்து வந்த தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளை மக்களின் முழு பங்களிப்புடன் நிறைவேற்ற அனுபவமும் முதிர்ச்சித் தன்மையும் சாணக்கியத்துடனும் அஞ்ஞா நெஞ்சத்தடனும் ஆதாரபூர்வமாக தமிழ் மக்களின் கோரிக்கைகைகளை உலகறிய செய்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஜனநாயக போராளிகளை நமது மக்கள் ஒட்டு மொத்தமாக தங்களின் எஞ்சியமானத்தை காக்கும் சொத்தாக பாதுகாத்து அதற்கு நமது ஒத்துழைப்பை முழுவீச்சாக பாவித்து தங்களது வாக்கு பலத்தை தமிழ் மக்களின் ஆதரவை எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி வழங்க வேண்டும்.
யார் எதைக் கூறினாலும் மக்கள் 17ம் திகதி காலை 7 மணிக்கும் பகல் 12 மணிக்குள் 85சதவிகிதமான வாக்குகளை முழுமையாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு வழங்கி வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கையை முழு உலகத்திற்கும் உறுதிப்படுத்த வேண்டும்.
2009 மே 18ஐ சிங்கள இனவாதிகள் கொண்டாடியதைபோல் ஆகஸ்ட் 18ஐ தமிழர்களின் வெற்றி நாளாக கொண்டாட வேண்டும். இது மௌனித்த நமது உறவுகளின் வேண்டுதல்.
அதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பை உலகிற்கும் இந்த இனவாத அரசியல்வாதிகளுக்கும் நமது பலத்தை வாக்கு சீட்டில் வீட்டுச் சின்னத்திற்கு புள்ளடியிட்டு உறுதிபடுத்துவதே ஏனைய பிரதேச வாழ் தமிழ் மக்களின் விமோசனமாகும்.
ஆகவே அன்று தேயிலை தூள் பானத்தை பெற்றுக்கொள்ள இலங்கையை பார்த்த உலக நாடுகள், அதன் பின் தலைவர் பிரபாகரனின் வீரத்தை பார்த்தது! நாளை இந்த நாடுகள் நமது ஒற்றுமையை பார்த்து நமது உரிமைக்காக உதவ முன்வரவேண்டும் அதற்கு இன்றுள்ள ஒரே வழி சிந்தித்து வாக்களித்தலே.
மகா.

No comments:

Post a Comment