தொலைக்காட்சி!!

Thursday, August 6, 2015

சற்று முன் பெஸ்டியன் மாவத்தை சூட்க்கேஸ் கொலையாளி கைதானர்: திடுக்கிடும் தகவல் !

2ம் இணைப்பு: 
எனது மகளின் சடலம் இருந்த பெட்டியை தூக்கிக் கொண்டு சென்றது "கிருஷ்ணா" என்பதை நான் படங்களில் இருந்து தெரிந்துகொண்டேன். அவர் கடந்த 2003 ஆம் ஆண்டு கொக்குவில்லைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பெண் பிள்ளை ஒன்று உள்ளது. இருவர் இடையேயும் பிரச்சினை இருந்த து. இதனால் இருவரும் பிரிந்தனர்.
பெண்பிள்ளையை கணவனின் உறவினர்களே வளர்க்கின்றனர். ஒரு வருட த்துக்கு முன்னர் அவர் (கிருஷ்ணா) கொழும்புக்கு சென்றார். மகளுக்கும் வரச் சொன்னதால் அவரும் கொழும்புக்கு சென்றார். கிருஷ்ணா தொடர்பில் வேறெதுவும் தெரியாது. அவரின் முழுப் பெயர் கூடத் தெரியாது. மகள் எனக்கு கடைசியாக 28 ஆம் திகதி பேசினார். அது மகள் இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர். அவர் தங்கச் சங்கிலியொன்றும் , மோதிரமொன்றையும் வாங்கியதாகச் சொன்னார்.
இப்போது பிரச்சினைகள் குறைவு எனவும் , தொந்தரவுகள் இன்றி வாழ்வதாகவும் தெரிவித்தார். பின்னர் 30 ஆம் திகதி காலையிலேயே மகளுக்கு இவ்வாறு நடந்துள்ளது என்பதை தெரிந்துகொண்டேன்" என்று கூறியுள்ளார் தாயார்.
1ம் இணைப்பு:
கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பஸ் தரிப்பு நிலையத்தில், சூட்க்கேசில் கார்த்திகாவின் உடலை விட்டுச் சென்ற நபரை தாம் கைதுசெய்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்துள்ளார்கள். மன்னார் கோவில் குளம் பிரதேசத்தில் வைத்தே பொலிசார் அவரைக் கைதுசெய்துள்ளார்கள் என்று அதிர்வின் விசேட நிருபர் சற்று முன் தெரிவித்துள்ளார். சற்று நேரத்திற்கு முன்னர்(இலங்கை நேரப்படி அதிகாலை) அவர் கைதாகியுள்ளார். அவரை உடனடியாக கொழும்புக்கு கொண்டு சென்று விசாரணை நடத்த மன்னார் பொலிசார் ஆயத்தங்களைச் செய்துள்ளார்கள்.
இன் நபரின் பெயர் விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இவரே கார்த்திகாவின் கள்ளக் காதலன் என்று கருதப்படுகிறார். கார்த்திகாவின் கணவர் கடந்த 2010ம் ஆண்டு முதல் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார். அவர் அனுப்பும் பணத்தை எடுத்து கொழும்பில் வீடு ஒன்றை எடுத்து உல்லாசமாக இருந்துள்ளார். கார்த்திகா. மேலும் தனது உல்லாசத்திற்கு தடையாக இருப்பர் என்ற காரணத்திற்காகவே தனது பிள்ளையை அம்மா வீட்டில் விட்டுள்ளார். அடிக்கடி செட்டி தெருவில் உள்ள விடுதி ஒன்றில் கார்த்திகா ரூம் புக் செய்வது வழக்கம் என்றும். அவரே காசை கட்டுவது வழக்கம் என்றும் அதன் உரிமையாளர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.
இன் நிலையில் தான் மன்னாரில் வைத்து , அவரது கள்ள காதலன் கைதாகியுள்ளார்.
இதேவேளை இவ்வாறு செய்யவேண்டாம் என்று , தான் பல தடை கூறியதாக அவரது அம்மா பொலிசாரிடம் தெரிவித்தும் உள்ளார். இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாக உள்ளது. அது வரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.

No comments:

Post a Comment