தொலைக்காட்சி!!

Wednesday, August 5, 2015

ஜேர்மனியில் அகதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை அதிகாரி எச்சரிக்கை

சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒரு அமைப்பால் ஜேர்மனியில் உள்ள அகதிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என உளவுத்துறை அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The Third Way என்ற அமைப்பு சமீப காலமாக அகதிகள் மீது பலவாறான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.
மேலும் அவர்களது போராட்டங்கள், வெறுப்பை தூண்டும் பிரச்சாரங்கள் என கலவரத்தை மூட்டும் வகையிலே அந்த அமைப்பின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக உள்ளூர் உளவுத்துறை அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
Bavaria பகுதியில் உள்ள வழக்கறிஞர்களிடம் இதுகுறித்த தடையங்கள் இருப்பதாக தெரிவித்த அந்த அதிகாரி, இதற்கு முன்னர் அகதிகளின் குடியிருப்புகளுக்கு தீவைத்து தப்பியதும் இந்த கும்பல்தான் என்று கூறியுள்ளார்.
மேலும் அடுத்தகட்ட தாக்குதல்களை அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் நடத்த கூடும் எனவும், இதனால் உயிர் சேதம் அதிகமாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட The Third Way என்ற அமைப்பு தமது 10 கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த அமைப்பின் ஊடகப்பிரிவினர், The Third Way அமைப்பிற்கு அகதிகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமில்லை என்றும், இது வேண்டுமென்றே பரப்பிவிடப்படம் வதந்தி எனவும் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment