Tuesday, August 4, 2015

சீனாவின் உளவு விமானத்தை வாங்கி பாக்கிஸ்தானை உளவு பார்த்த இந்தியா: தகவல் இதோ !

கடந்த மாதம் பாகிஸ்தான் ஒரு ஆளில்லா மர்ம விமானத்தை சுட்டு வீழ்த்தியது. சீனத் தயாரிப்பான, அந்த விமானம் தங்கள் நாட்டை வேவு பார்க்க இந்தியாவால் ஏவப்பட்டது என பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனை அடுத்து சில சீன அதிகாரிகள் அந்த விமானத்தை சோதனையிட்டார்கள். என்ன ஆச்சரியம் அது சீன தயாரிப்பு விமானம் தான். சீனாவில் பல , எலக்ராணிக்ஸ் கம்பெனிகள் இயங்கி வருகிறது. அதில் பல ஆளில்லா விமானங்களை தயாரித்து தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இதுபோல அந்த குறித்த விமானத்தை இந்தியா பெற்று அதனை அது வேவு பார்க பயன்படுத்தி உள்ளது. மாட்டிக்கொண்டால் கூட அது சீன தயாரிப்பு விமானம் தானே.
இந்நிலையில், தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, சீன அரசு கடுமையானகட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி முதல், சீனத் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சக்தி வாய்ந்த ஆளில்லா விமானங்கள் மற்றும் கணினிகளுக்கு அரசின் அனுமதி பெற வேண்டும். ஏற்றுமதியாளர்கள் அந்த விமானத்தை எந்த நாட்டுக்கு விற்கிறார்கள் என்பது தொடர்பான விபரங்களுடன் அந்நாட்டு அரசிடம் முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
அந்த விண்ணப்பம் அரசின் ஒப்புதலை பெற்றதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது தொடர்பாக, விண்ணப்பதாரர்களுக்கு 45 நாட்களுக்குள் பதிலளிக்கப்படும் என்று சீன அரசு தரப்புதெரிவித்துள்ளது்.

No comments:

Post a Comment