தொலைக்காட்சி!!

Monday, August 3, 2015

”ஓரினச்சேர்க்கையாளர்களை கொல்ல வேண்டும்”: கிறித்துவ ஆயரின் கருத்தால் கிளம்பிய சர்ச்சை

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கிறித்துவ ஆயர் ஒருவர் ஓரினச்சேர்க்கையாளர்களை கொல்ல வேண்டும் என கூறிய கருத்திற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
சுவிஸில் உள்ள Chur தேவாலயத்தை சேர்ந்த Vitus Huonder என்ற கிறித்துவ ஆயர் ஜேர்மனியில் உள்ள Fulda நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க சென்றுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கருத்துரங்கில், கிறித்துவ மத நூலான பைபிளில்(பழைய ஏற்பாடு) இருந்து ஒரு வாக்கியத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
Leviticus 20:13 என்ற பக்கத்தில் வரும் அந்த வாக்கியத்தில், தங்களுடைய இனத்திலேயே பாலியல் உறவுகளை வைத்துக்கொள்ளும் ஆண்களை கொல்ல வேண்டும் என்றும் அவர்களின் ரத்தத்தை அவர்களின் தலைகளிலேயே பூச வேண்டும் என குறிப்பிட்டு இருந்துள்ளதை அவர் வாசித்துள்ளார்.
ஆயரின் இந்த பேச்சு கருத்தரங்கள் பங்கேற்ற சில பழமைவாதிகளிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான பல சுவிஸ் அமைப்புகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் ஓரினச்சேர்க்கையார் உரிமைகள் அமைப்பான Pink Cross ஆயரின் பேச்சு அதிர்ச்சியையும் பெரும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், இதற்காக ஆயர் பகிரங்க பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும், அவர் கிறித்துவ தேவாலயத்தில் ஆயராக இருக்கிறாரா, இல்லை ஓரினச்சேர்க்கைக்கு எதிராக போராடும் போராளியாக இருக்கிறாரா என அந்த அமைப்பு கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சுவிஸில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக வெளியாகும் 360.ch என்ற பத்திரிகை, எதிர்ப்பு கருத்துக்களை பரப்பி வரும் இதுபோன்ற ஒரு ஆயரை போப் ஆண்டவர் ஏன் இன்னும் மக்களுக்கு மதபோதனைகளை வழங்க அனுமதித்திருக்கிறார் என தெரியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளது.
கிறித்துவ தேவாலயங்களில் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதை விட, ஓரினச்சேர்க்கை ஒன்றும் பெரும் சர்ச்சையை கிளப்பவில்லை என ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment