தொலைக்காட்சி!!

Tuesday, August 4, 2015

”அங்கஜன் அண்ணா” – “அங்கஜன் அண்ணா” எனும் ஸ்ரீகாந்தி யார்?

யாழிற்கு கடந்த 28ம் திகதி ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா திடீர் விஜயம் மேற்கொண்ட போது நல்லூர் ஆலய முன்றலில் வடக்கு கிழக்கை சேர்ந்த காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை நடாத்தி இருந்தார்கள்.

அந்த போராட்டத்தில் ஒரு பெண் முன்னின்று ஒழுங்கு படுத்தி குரல் கொடுத்தார். குறித்த பெண்ணினை அதற்கு முந்திய காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்களில் எவரும் கண்டதில்லை. ஆனால் அந்த பெண்ணே போராட்டத்தை வழி நடத்தினார்.
பின்னர் ஜனாதிபதியினை சந்திப்பதற்கு என கோவில் வீதியில் உள்ள சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதனின் வீட்டுக்கு போராட்ட காரர்களை அழைத்து சென்று அங்கு சந்திப்பினை ஒழுங்குபடுத்தினார்.
ஜனாதிபதியுடன் காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது துயரத்தை எடுத்து கூறிக்கொண்டு இருக்கும் வேளையில் இடை இடையில் குறித்த பெண் இந்த துயரங்களை எல்லாம் அங்கஜன் அண்ணா தான் தீர்த்து வைக்க கூடியவர்கள் என வார்த்தைக்கு வார்த்தை ”அங்கஜன் அண்ணா’ , ‘அங்கஜன் அண்ணா’ என ஜனாதிபதி முன்னால் அங்கஜன் புகழ் பாடிக்கொண்டு இருந்தார்.
ஒரு கட்டத்தில் திருகோணமலையை சேர்ந்த தாய் ஒருவர் தனது மகனை திருகோணமலை கடற்படையினர் தான் கடத்தி சென்றனர் என ஜனாதிபதியிடம் முறையிட்டுக்கொண்டு இருந்த வேளை இடைமறித்து குறித்த பெண் அங்கஜன் அண்ணா இருக்கிறார் அவர் எல்லாம் செய்து தருவார் என கூற ஜனாதிபதி சைகை மூலம் குறித்த பெண்ணை கதைக்க வேண்டாம் என கூறி தாயை கதைக்க சொன்னார்.
இறுதியில் ஜனாதிபதி காணாமல் போனவர்கள் தொடர்பில் தனது தலைமையில் ஒரு செயலணி உருவாக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் அது தேர்தல் முடிந்த பின்னரே உருவாக்கப்படும்.
உங்களை மாவட்ட அரச அதிபர் மற்றும் ஆளூநர் ஊடாக தொடர்பு கொள்வோம். ரகசிய முகாம்கள் அல்லது காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் என நீங்கள் சந்தேகிக்கும் இடங்கள் இருந்தால் அது தொடர்பில் தகவல்களை வழங்குமாறு கோரினார்.
அவ்வேளையும் குறித்த பெண் அதனை அங்கஜன் அண்ணா மூலம் செய்யுங்கள் என ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறினார். உடனே ஜனாதிபதி அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு அவ்விடத்தில் இருந்து எழுந்து சென்றார்.
இந்த பெண் தான், காணாமல் போனோர் சங்க தலைவி ஸ்ரீகாந்தி தான் எனவும் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு அவசர அழைப்பு என பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்து யாழில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை காணாமல் போனவர்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ள உள்ளாதாக அழைத்து இருந்தார்.
அந்த பெண்ணுடனேயே செவ்வாய்க்கிழமை (04.08.2014) காணாமல் போனவர்களின் உறவினர்கள் முரண்பட்டு அவருக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர்.
குறித்த பெண் காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் அங்கஜனின் ஆள் எனவும் தன் மீது கை வைத்தால் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டி இருந்தார்.


அதேவேளை (04.08.2014) செவ்வாய்க்கிழமை யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அங்கஜன் இராமநாதன் அங்கு காணாமல் போகடிக்கப் பட்டவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து அந்த பெண்ணுக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.Upfa IntrRane 01Upfa IntrRane 02Upfa IntrRane

No comments:

Post a Comment