Monday, August 3, 2015

பூமியை நெருங்க வந்த விண்கல்: புகைப்படம் எடுத்த நாசா (வீடியோ இணைப்பு)

1999ஜேடி 6 என்ற விண்கல் பூமிக்கு மிக அருகில் வந்து சென்றதை நாசா விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்துள்ளனர்.
இந்த விண்கல்லானது கடந்த யூலை மாதம் 24 ஆம் திகதி பூமிக்கு அருகே, அதாவது 70.2 லட்சம் கிலோமீற்றர் தொலைவில் நெருங்க வந்துள்ளது, இந்த விண்கல்லின் நீளம் 1.2 மைல் ஆகும்.
இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது, இந்த விண்கல்லின் தன்மை குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது, இந்த விண்கல் குறித்து தெளிவான விளக்கம் தெரியவந்தால் பூமி போன்ற கிரங்கள் எப்படி உருவாகின என்பது குறித்து அறிந்துகொள்ளலாம்.
இந்த விண்கல் 2054 ஆம் ஆண்டு இதே அளவிலான தூரத்தில் மீண்டும் பூமியை நெருங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1999ஜேடி 6 என்ற விண்கல், 1999 ஆம் ஆண்டு மே 12 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment