தொலைக்காட்சி!!

Sunday, August 2, 2015

9ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த 3 சக மாணவர்கள் !


குர்காவ்னில் 9ம் வகுப்பு மாணவி சக மாணவர்கள் 3 பேர் உள்பட 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குர்காவ்னைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி முடிந்த பிறகு நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ ஒன்றில் அவருடன் படிக்கும் 3 மாணவர்கள் வந்தனர். அவர்கள் மாணவியை ஆட்டோ டிரைவர் உதவியுடன் கடத்திச் சென்றனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று ஆட்டோ டிரைவர் மற்றும் மாணவர்கள் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் உன்னை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அவர்களின் மிரட்டலை தாண்டி மாணவி நடந்த சம்பவம் பற்றி வெள்ளிக்கிழமை மாலை போலீசில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர் பலரால் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
இதையடுத்து போலீசார் இரண்டு மாணவர்களை கைது செய்து சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு மாணவர் மற்றும் ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment