தொலைக்காட்சி!!

Sunday, August 2, 2015

இந்த 5 வயது குழந்தையை ஹிரோவாக அறிவித்துள்ளது கனேடிய அரசாங்கம் !

இந்த 5 வயதுக் குழந்தை அவரது அம்மா ,மற்றும் தம்பி ஆகியோர் காரில் பயணித்த வேளை அவர்களது கார் தடம் புரண்டு ஒரு பள்ளத்தாக்கினுள் சென்றுவிட்டது. இதனால் தாயார் படுகாயம் அடைந்து மயங்கிவிட்டார். தப்பிக்கு தலையில் அடி பட்டு ரத்தக் கசிவு ஏற்பட்டது. குறித்த சிறுமியும் காயத்திற்கு உள்ளானார். லெக்ஸ் என்னும் இந்த 5 வயது சிறுமி தன்னை விடுவித்துக்கொண்டு , காரில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரது காலில் இருந்த செருப்பு கூட காரில் மாட்டி விட்ட நிலையில் வெறுங் கால்களோடு , 40 அடி உயரமான அந்த சிறிய மலைமீது ஏறியுள்ளார். அவ்வளவு தூரம் ஏறினால் தான் , மேலே யாராவது இருந்தால் அவர்களிடம் உதவியைப் பெறமுடியும்.
இவ்வாறு மிகவும் கஷ்டப்பட்டு இறுதியாக அவர் அந்த மலை மீது ஏறியதனால் அங்கே ஒரு சாலை இருப்பதை அவர் அவதானித்தார். அங்கே ஏதாவது ஒரு கார் வராதா என்று அவர் எதிர்பார்த்தவேளை தெய்வாதீனமாக ஒரு கார் வந்துள்ளது. அதனை நிறுத்திய அச்சிறுமி நடந்ததை கூறியுள்ளார். என்ன ஒரு அதிஷ்டம் பாருங்கள் , அந்த காரில் வந்தவர் ஒரு மருத்துவர். அவர் உடனே சிறுமியுடன் சென்று விபத்திற்கு உள்ளான காரில் இருந்த அம்மாவைப் பார்த்துள்ளார். அவருக்கு முள்ளந்தண்டில் அடிபட்டு இருந்தது. இவ்வாறு முள்ளந்தண்டில் அடிபட்ட நபர்களை நகர்த்தினால் மேலும் பாதிப்பு வரும். இதனை உணர்ந்துகொண்ட மருத்துவர், சிறுவனை வெளியே எடுத்து விட்டு உடனே பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்.
தீ அணைக்கும் படை , பொலிசார் மற்றும் மருத்துவக் குழுவினர் எனப் பலர் விரைந்து வந்து உடனே அனைவரையும் காப்பாற்றி பத்திரமாக வைத்தியசாலை எடுத்துச் சென்றுள்ளார்கள். தனது குடும்பத்தைக் காப்பாற்ற இவ்வளவு சிரமப்பட்ட லெக்ஸ் எனப்படும் இச் சிறுமி துணிச்சல் நிறைந்தவர் மட்டும் அல்ல சமயோசித புத்தியும் கொண்டவர் என கனேடிய அரசு பாராட்டியுள்ளது. அவர் ஒரு ஹிரோ என்றும் வைத்தியர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்து புகழாரம் சூட்டியுள்ளார்கள். கடவும் சிலவேளைகளில் சிறு பிள்ளை ரூபத்தில் வரும் என்பார்கள். அது இது தான் போல் உள்ளது.

No comments:

Post a Comment