தொலைக்காட்சி!!

Thursday, August 6, 2015

கொட்டாஞ்சேனையில் 2 வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெஸஞ்சர் வீதியில் உள்ள தங்குமிடமொன்றில் 2 வருடமும் 2 மாதங்களுமான பெண் குழந்தையொன்று பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் நபர் ஒருவரை தேடி வரும் நிலையில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் குறித்த தங்குமிடத்தில் தங்கியிருக்கும் பெண் ஒருவர் தனது 2 வயதும் 2 மாதங்களும் நிரம்பிய குழந்தையை பிறிதொரு பெண்ணிடம் பார்த்துக் கொள்ளுமாறு கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் அன்றைய தினம் இரவு 9 மணியளவில் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக பொறுப்பெடுத்த பெண்ணின் கணவர் என அறியப்படும் நபர் குழந்தையை அதன் தாயிடம் திருப்பி ஒப்படைத்துள்ளார்.
குழந்தையை தாய் பொறுப்பேற்ற பின்னர் குழந்தை மயக்கமுற்று விழுந்துள்ளது.
இதனையடுத்து குழந்தை உடனடியாக பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எனினும் அதிகாலை 2 மணியாகும் போது குழந்தை இறந்து விட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குழந்தையானது பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தையின் தாயிடம் வாக்குமூலம் பெற்றுள்ள பொலிஸார், குழந்தையை தாயிடம் மீண்டும் ஒப்படைத்த நபரைத் தேடிவருகின்றனர்.
குறித்த நபர் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

No comments:

Post a Comment