Friday, July 31, 2015

தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது? கேரளாவில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் !

தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?

கேரளாவில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம்
பிணையில் வர முடியாது - 7 ஆண்டுகள் வரை சிறை - அபராதம்!

கொச்சி, ஜூலை31_ மூடநம்பிக்கைகளால் செய் யப்படுகின்ற குற்றங் களுக்கு 3 முதல் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை யுடன் ரூ.50ஆயிரம் முதல் ரூ.2 இலட்சம்வரை தண் டம் விதிக்கப்படும் என் றும் புதிய சட்டத்தின் வரைவில் கூறப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வருவதற்கான சட்டமுன் வரைவு  ஆயத்தமாக இருப் பதாகவும் விவாதங் களுக்குப்பிறகு அது புதிய சட்டமாக நிறைவேற் றப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வருவதில் விரை வில் கேரள அரசு விவா தங்களை மேற்கொண்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்க உள்ளது.
மூடநம்பிக்கைகளால் சுரண்டல்களின்மூலமாக ஏமாற்றுவதைத் தடுக்கும் சட்டம் 2014 வரைவினை கேரள அரசு கொண்டு வருகிறது.
இயற்கைக்கு மீறிய சக்திக்கும், மந்திர சக்தி களுக்கும் உட்பட்டது என்று கூறப்பட்டு அதன் மூலமாக மனநிறைவு பெறுவதாக தவறாக கருதப்பட்டு வருகிறது.   மூடநம்பிக்கைகளால் நடந்துவரும் சுரண்டல் கள் இந்த வகையிலான வைகளாக உள்ளன.
கேரள மாநில உளவுத் துறைக்கான காவல் துறையின் கூடுதல் தலைவ ராக உள்ள ஹேமச்சந்தி ரன் மூடநம்பிக்கைகள் சார்ந்த குற்றங்களை மய்யப்படுத்தி புதிய சட்ட வரைவினை அரசுக்கு அளித்துள்ளார்.
மூடநம்பிக்கைகளை மய்யமாகக்கொண்டு நடைபெற்றுவரும் அனைத்து குற்றங்களும் தெரிந்தே செய்யப்படு பவையாக இருப்பதால் பிணையில் விடப்பட முடியாத குற்றங்களாக புதிய சட்டத்தின்படி பார்க்கப்படும். கடவுள் சக்தி, இயற்கைக்கு மீறிய சக்திகளால் பொருளா தார பயன்கள் அல்லது பாலியல் இயல்பு உள்பட வேண்டுதல்கள் நிறை வேறுவதாக கூறப்படும் எந்த செயலும் இச்சட்டத் தின்கீழ் குற்றமாகும். இச்சட்ட வரைவின்படி, வேண்டுதல் நிறைவேறு வது என்பதற்கான வரை யறை என்பதில் பணம் மட்டுமில்லாமல், பாலியல் ரீதியான வேண்டுதல் என்பதும் உள்ளடக்கமாக உள்ளது.
அச்சட்ட முன்வரை வில் பழைமையான சடங் குகள், விழாக்கள், பல் வேறு மத நம்பிக்கைகளின் பெயரால் வழிபாட்டி டங்களில் உள்ள நடை முறைகள் உள்ளிட்ட வைகளுக்கு எச்சரிக்கை யுடன் விதிவிலக்கு அளிக் கப்படுகிறதாம்.
புனித தண்ணீர் நோய்களைக் குணப்படுத் தும் என்று கூறப்படுவது அச்சட்டத்தில் குற்றமாக் கப்படாதாம்.

புதிய சட்ட வரைவின் படி, மூடநம்பிக்கைகளால் சுரண்டப்படும் குற்றங் களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அய்ம் பதாயிரம் ரூபாய் தண்டத் தொகையும் விதிக்கப்படும். மோசமான வகையில் உடல் காயங்கள் மற்றும் மனப் பேதலிப்பை ஏற் படுத்தியிருந்தால், சொத்துக்களை நாசம் செய்திருந்தால் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இரண்டு இலட்சம் ரூபாய் வரை தண்டத் தொகையும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
http://viduthalai.in/e-paper/106089.html#.Vbty21cWBEA.facebook

No comments:

Post a Comment