Thursday, July 30, 2015

பயணப் பொதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்!

கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் பயணப் பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண் சம்பவ தினத்திற்கு முதல் நாள் கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்ததாக புலனாய்வு விசாரணைகள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
இவர்கள் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் எனவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
எனினும், எந்த லொட்ஜில், யாருடன் தங்கியிருந்தார் என்பது குறித்த விரிவான விபரங்கள் கிடைக்கவில்லை.
எனினும், லொட்ஜில் கடமையில் இருந்த ஊழியர் உள்ளிட்ட பல தரப்பினரிடம் இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



பெண்ணின் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோரும் காவற்துறையினர்
[ புதன்கிழமை, 29 யூலை 2015, 01:46.50 PM GMT ]
கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து தரிப்பிடத்தில் பயணப் பொதி ஒன்றில் இருந்து மீட்கப்படட பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு காவற்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 முதல் 40 வயது மதிக்க தக்க இந்தப் பெண் உயரம் சுமார் 5 அடி இரண்டு அங்குளம் எனவும் அவர் கழுத்தி்ல் அணிந்துள்ள தங்கச் சங்கிலியில் ஓம் என்ற எழுத்து பதித்த பென்டன் ஒன்றும் இருப்பதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த பெண் பற்றிய தகவல் தெரிந்தால், அது பற்றி கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் தொலைபேசி எண்களான 011-266 23 11 மற்றும் 011  2685151 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு காவற்துறையினர் பொதுமக்களை கேட்டுள்ளனர்.

No comments:

Post a Comment