Thursday, July 30, 2015

ஹிட்லரை தடுத்த லண்டனால் இவர்களை தடுக்க முடியாமல் இருப்பது ஏன் ?


இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனிய ஹிட்லர் படைகள் , பிரித்தானியாவை கைப்பற்றாமல் இருக்க பிரித்தானியா பெரிதும் முயன்று வெற்றிகண்டது. ஆனால் தற்போது பிரான்ஸ் எல்லையான கலையில் உள்ள சில நூற்றுக் கணக்கான அகதிகளை கட்டுப் படுத்த முடியாமலும் , அவர்களை தடுக்க முடியாமலும் பிரித்தானியா திண்டாடி வருகிறது. இவ்வாறு டெய்லி மெயில் என்னும் ஆங்கிலப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. லிபியா நாட்டில் இருந்து நூற்றுக் கணக்கான அகதிகள் பிரான்ஸ் வந்துள்ளார்கள். அவர்கள் நோக்கம் பிரான்சில் தங்குவது அல்ல. எப்படி என்றாலும் பிரித்தானியாவுக்குள் வந்து விடுவது தான். இதற்காக அவர்கள் சாவதற்கு கூட தயாராக உள்ளார்கள்.
பிரான்சின் கலை என்னும் இடத்தில் இருந்து தான் பல கப்பல் சேவைகள் பிரித்தானியாவை நோக்கிச் செல்கிறது. அங்கே முகாமிட்டுள்ள இவர்கள் அவ்வப்போது தடைகளையும் மீறி ஓடி வந்து கப்பல்களில் ஏற முயற்ச்சி செய்து வருகிறார்கள். பிரான்சில் உள்ள பொலிசாரால் இவர்களை முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. பிரித்தானியாவின் பொலிசார் சிலர் பிரான்சில் உள்ளார்கள். இருப்பினும் அவர்கள் கண்களில் கூட மண்ணை தூவி விட்டு அவர்கள் தப்பிச் செல்கிறார்கள். இன் நிலை நீடித்தால் இன்னும் சில காலத்தில் ஆயிரக்கணக்கான அகதிகள் பிரித்தானியாவுக்குள் ஊடுருவிடுவார்கள்.



No comments:

Post a Comment